HomeTrending Newsஇதோட நான் விடைபெறுகிறேன் ; ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகிய சுரேஷ் ரெய்னா ; வேறு...

இதோட நான் விடைபெறுகிறேன் ; ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகிய சுரேஷ் ரெய்னா ; வேறு போட்டியில் விளையாட போகிறார் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டி என்றால் அது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் தான். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்பு ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை வெற்றிகரமாக 15 சீசன் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளிலும், அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இதில் தான் சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. ஏனென்றால் ஐபிஎல் 2020ஆம் ஆண்டு சென்னை அணிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் அந்த ஆண்டு அவரால் விளையாட முடியாத நிலை உருவானது.

பின்பு சுரேஷ் ரெய்னா 2021ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் இடம்பெற்று விளையாடி வந்தார். ஆனால் இறுதி போட்டி நடைபெறுவதற்கு முன்பு சுரேஷ் ரெய்னாவை காயம் என்ற காரணத்தை சொல்லி சென்னை அணியில் இருந்து வெளியேற்றினார்கள். பின்பு ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க சுரேஷ் ரெய்னா, எந்த அணியாலும் கைப்பற்ற படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பாரோ அப்பொழுது தான் நானும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் இருந்து விலகுவேன் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா. ஆனால், தீடிரென்று இப்பொழுது வெளியான தகவலின் படி சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிஎஸ்கே அணியின் வலுவான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி கொண்டு இருந்த சுரேஷ் ரெய்னா இனிமேல் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால்தென்னாபிரிக்கா டி-20 லீக் போட்டிகளில் சென்னை அணியின் நிர்வாகம் அதில் ஒரு அணியை விலைக்கு வாங்கியுள்ளது.

அதில் சுரேஷ் ரெய்னா இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. பிசிசிஐ தகவலின் படி தென்னாபிரிக்கா அல்லது ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து மற்ற போட்டிகளில் விளையாட வேண்டுமென்றால் இந்திய அணியிலும், ஐபிஎல் போன்ற போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டுமென்பது தான்.

சமீபத்தில் தான் சுரேஷ் ரெய்னா சென்னை உடையில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் பகிர்ந்து கொண்டு வந்தனர். சுரேஷ் ரெய்னா இனிமேல் ஐபிஎல் போட்டிகளில் இல்லாதது உங்களுக்கு எப்படி இருக்கிறது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img