வீடியோ ; ரெய்னா இப்படி எல்லாம் செய்வார் என்று சத்தியமா எதிர்பார்க்கவில்லை ; வைரலாகும் பதிவு

ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் செய்யத செயலால் கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நடந்த 15வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 220 ரன்களை விளாசியுள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்கள், டுப்ளஸிஸ் 95 ரன்கள், மொயின் அலி 25 ரன்கள் மற்றும் தோனி 17 ரன்களை எடுத்துள்ளனர்.

பின்பு 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக ஆன்ட்ரே ரசல் 54 ரன்கள், தினேஷ் கார்த்திக் 40 ரன்கள், பேட் கம்மின்ஸ் 66 ரன்களை விளாசியுள்ளனர். அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

வீடியோ ; ரெய்னா இப்படி எல்லாம் செய்வார் என்று சத்தியமா எதிர்பார்க்கவில்லை ; வைரலாகும் பதிவு

15வது போட்டிக்கு முன் மைதானத்தில் வீரர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் , மற்றும் சிஎஸ்கே அணியின் வீர்ரகள் சாம் கரண், தீபக் சாகர், ஜடேஜா மற்றும் இம்ரான் தாஹிர் அங்கு இருந்தனர்.

அப்பொழுது சின்ன தல சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் காலில் விழுந்து வணங்க முயன்ற போது ஹர்பஜன் சிங், ரெய்னாவை தூக்கி கட்டி தழுவினார். அதன் வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாழ்க்கையில் எந்த அளவு உயர்ந்தாலும் மரியாதையை நிச்சியமாக இருக்க வேண்டும், அதற்கு இதுதான் நல்ல உதாரணம். ரெய்னா செய்த நெகிழ்ச்சி செயலால் , கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.