கேப்டன் ஆக போகிறாரா ?? சின்ன தல ரெய்னா..! சிஎஸ்கே இல்லை , இந்த அணியின் கேப்டனாக வாய்ப்பு உள்ளது ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் என்பது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் புதிதாக இரு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகியுள்ளது. அதனால் அதனை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகள் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக அளவில் எதிர்பார்க்கும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதில் ஐபிஎல் அறிமுகம் ஆன ஆண்டு முதல் கடந்த ஐபிஎல் 2021 வரை தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் இணைந்து சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்தி வந்தனர்.

இடையில் இரு ஆண்டுகள் மற்றும் தோனி புனே அணியிலும், சுரேஷ் ரெய்னா குஜராத் அணியிலும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, ருதுராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு வீரர்கள் தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.

முதல்முறையாக சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தான் உண்மை. அதுமட்டுமின்றி, நடந்து முடிந்த ஐபிஎல் 2021யின் இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் சுரேஷ் ரெய்னா சொல்லும் அளவுக்கு ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்ப அணியில் இடம்பெற்றார்.

ஆனால் சமீபத்தில் வெளியான செய்தியின் படி சுரேஷ் ரெய்னா புதிதாக அறிமுகம் ஆகியுள்ள லக்னோ அணியில் தான் இடம்பெற போகிறார் என்றும் அதிக அனுபவம் ரெய்னாவுக்கு இருப்பதால் அவரை கேப்டனாக பொறுப்பேற்ற பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் ரெய்னா மட்டும் வேறு அணிக்காக விளையாடினால் நிச்சியமாக பல சிஎஸ்கே வீரருக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஐபிஎல் 2020யில் அவருக்கும் சிஎஸ்கே அணிக்கும் சில சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அவருடைய உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் தான் ஐபிஎல் 2020யில் சுரேஷ் ரெய்னா விளையாட வில்லை என்று தகவல் வெளியானது. அப்பொழுது கூடிய விரைவில் சுரேஷ் ரெய்னாவுக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக அன்றே தகவல் வெளியானது. அதனால் சுரேஷ் ரெய்னாவை நிச்சியமாக சிஎஸ்கே அணி மீண்டும் எடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.