இன்னும் இவர் குறைந்தது 10 ஆண்டுகள் ஆவது இந்திய அணியில் இருக்க வேண்டும் அதுவே என் ஆசை : சுரேஷ் ரெய்னா …யார் அந்த வீரர் ??
இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் வாஷிங்டன் சுந்தர், சுமன் கில், நட்ராஜன், அக்சர் பட்டேல், பிரஷித் கிருஷ்ணா,ரிஷாப் பண்ட் போன்ற பல இளம் வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று அவரவர் திறமைகளை காட்டி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ்ரெய்னா அவருக்கு பிடித்த இந்திய வீரரை பற்றி கருத்து கூறியுள்ளார். அதில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் ரிஷாப் பண்ட் தான் என்று கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் , டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் ரிஷாப் பண்ட் . அவர் சில ஆண்டுகள் பிட்னெஸ் காரணமாக பல போட்டிகளில் விளையாடாமல் இருந்துள்ளார்.
ஆனால் இப்பொழுது அவரது கடினமான உழைப்பால் அவரது அதிரடி ஆட்டத்தை ரசிகர்களை ஈர்த்துள்ளார் . அதுமட்டுமின்றி ரிஷாப் பண்ட் நல்ல பேட்ஸ்மேன் மட்டுமின்றி சிறப்பான விக்கெட் கீப்பர் என்று கூறியுள்ளார் இந்திய அன்யோயின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா.
அதுமட்டுமின்றி டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பலமாக தோள்பட்டையில் அடிபட்டு விட்டதால் அவரால் மீதமுள்ள போட்டியிலும் , ஐபிஎல் 2021 விளையாட முடியாமல் போய்விட்டது.
அதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் கேப்டன் ஆக டெல்லி சாப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் ஐபிஎல் 2021 போட்டிகள் அவர்தான் இளம் கேப்டன் என்று கூட சொல்லலாம்.
ஐபிஎல் 2021யில் சிறப்பான முறையில் அதிரடியாக பேட்டிங் செய்தால் நிச்சியமாக அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு நிச்சியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை