இவருக்கும் ஒருநாள் போட்டிக்கும் சம்பந்தமே இல்லை போல ; டி-20 போட்டிக்கு மட்டும் இவர் சரிப்பட்டு வருவார் ; ஒருநாள் போட்டிக்கு இல்லை ;

0

நேற்று இரவு 7 மணியளவில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டி போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்..! முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

இருப்பினும் அவ்வப்போது மழை பெய்த காரணத்தால் போட்டிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 36 ஓவர் மட்டுமே இரு அணிகளும் விளையாட முடியும் என்று முடிவு செய்தனர். அதில் இந்திய அணி 36 ஓவர் முடிவில் அதிரடியாக விளையாடி 3 விக்கெட்டை இழந்த நிலையில் 225 ரன்களை அடித்தனர்.

அதில் ஷிகர் தவான் 58, சுமன் கில் 98, ஸ்ரேயாஸ் ஐயர் 44, சூரியகுமார் யாதவ் 8, சஞ்சு சாம்சன் 6 ரன்களையும் அடித்துள்ளனர். பின்பு 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை மட்டுமே இழந்தனர்.

சிறப்பாக பவுலிங் செய்த இந்திய வீரர்கள் 26 ஓவரில் 10 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். அதனால் 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 22, பிராண்டன் கிங் 42, நிக்கோலஸ் பூரான் 42, கார்ட்டி 5, ஜேசன் ஹோல்டர் 9 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளனர். நாளை முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து ஐந்து டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. டி-20 போட்டிக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மிகவும் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடிவரும் வீரர்களில் ஒருவர் தான் சூர்யகுமார் யாதவ்.

இவர் கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளின் மூலம் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இதுவரை அசைக்க முடியாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சரியாக விளையாடுவது இல்லை. ஆமாம், இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 310 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 27, 16 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

அதே சமையத்தில் நேற்று நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் 13,9, 8 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் சூர்யகுமார். டி-20 போட்டிகளில் சதம் அடித்தாலும், ஒருநாள் போட்டிக்கான தொடரில் அரைசதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறார் சூர்யகுமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here