ரோஹித் இல்லை ; ஐசிசி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ; பட்டியலின் விவரம் இதோ ;

0

உலக மக்களுக்கும் இப்பொழுது கிரிக்கெட் போட்டிகளை பார்க்கவும் விளையாடவும் அதுமாக ஆர்வம் எழுந்துள்ளது. அதில் இந்தியாவில் எப்பொழுதும் முதல் இடம் தான். ஏனென்றால், இந்திய மக்களுக்கு மற்ற போட்டிகளை விட அதிகமான ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிக்கு உள்ளனர் என்பது தான் உண்மை.

இப்பொழுது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளனர். இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல வேண்டிய சூழல் உள்ளது இந்திய. தொடரை கைப்பற்றுமா ?

இந்திய அணி விளையாடி வரும் போட்டிகளில் மிகவும் கவனமாக வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.ஏனென்றால் இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் வீரர்களை தேர்வு செய்வதில் கவனமாக உள்ளது தான் உண்மை.

ஏனென்றால் கடந்த ஆண்டு ஐசிசி டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான அரை இறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது பிசிசிஐ.

அதில் முக்கியமான ஒரு வீரர் தான் சூரியகுமார் யாதவ். டி-20 போட்டி என்றால் அதில் இவரது பெயர் நிச்சியமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பட்டியலில் இடம்பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இந்தியா அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார் சூரியகுமார் யாதவ். அதில் இருந்து இதுவரை அதிரடியாக மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் இப்பொழுது இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யாரும் சரியாக அமையாத காரணத்தால் சூரியகுமார் யாதவை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

அதுவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரு டி-20 போட்டியில் பெரிய அளவில் விளையாடாமல் விக்கெட்டை இழந்தார். ஆனால், மூன்றாவது போட்டியில் 44 பந்தில் 76 ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதனால் இந்திய அணி வெற்றிபெற உதவியாக இருந்தது.

டி-20 போட்டிக்கான ஐசிசி அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 816 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். மற்ற இந்திய வீரர்களான இஷான் கிஷான் 14வது, ரோஹித் சர்மா 16வது மற்றும் கே.எல்.ராகுல் 20வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here