இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் டி-20 உலகக்கோப்பை வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை இந்தியாவில் தான் நாடாகும் என்று முன்பே சொன்னதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆனால் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் , இந்திய நடைபெறுமா இல்லையா என்று பல கேள்விகள் எழுந்தன. சமீபத்தில் பிசிசிஐ அளித்த பேட்டியில் நிச்சியமாக டி-20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் தான் நடைபெறும் என்று சொன்ன நிலையில் இப்பொழுது சிறுது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சற்று கொரோனா 2வது அலை வீசிக்கொண்டு இருக்கிறது. அதனால் ஒருவேளை 3வது அலை வந்தால் இந்தியாவில் என்ன நாடாகும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் இப்பொழுது பிசிசிஐ சில முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் பிசிசிஐ உறுப்பினர்கள் பேசியதில்: வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாடு அல்லது ஓமான் -னில் போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்த ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ. மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு நாட்டில் செப்டம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ.
ஒருவேளை மீதமுள்ள ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் நடந்து முடிந்துவிட்டால். டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நவம்பர் மாதத்தில் தொடங்க சரியாக இருக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஏனென்றால் கொரோனா தாக்கத்தால் ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் பாதியில் ரத்து செய்தனர்.
அதேபோல டி-20 உலகக்கோப்பை போட்டியில் ஏற்படக்கூடாது என்று பிசிசிஐ முடிவு செய்தது. ஏனென்றால் இதில் பல சர்வதேச கிரிக்கெட் நாட்டில் இருந்து வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதனால் பல பாதுகாப்பு விதியை பின்பற்றி நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ.