அட்ரா அட்ரா…!!! இறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழக அணி… விஜய் ஹசாரே கோப்பையில் நடந்த மாஸ் சம்பவம் ; என்ன அடி …!!

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டி ஒரு பக்கம் நடைபெற இருந்தாலும், விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டி இந்தியாவில் நடைபெற்று கொண்டு வருகின்றது. இன்றைய போட்டியில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், ஜெயதேவ் தலைமையிலான சௌராஷ்டிர அணியும் அரையிறுதியில் மோதின.

அதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சௌராஷ்டிர அணி தொடக்கத்தில் சற்று சோர்வான ஆட்டத்தை விளையாடினாலும் பின்னர் போக போக ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார். அதனால் நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 310 ரன்களை அடித்தனர். அதில் விஸ்வராஜ் ஜடேஜா 52, ஹார்விக் தேசாய் 9, ஜாக்சன் 134, மங்கட் 37, வாசவட 57 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்னர் 311 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் கலமிறங்கியது தமிழக அணி. முதல் சில ஒவர்களில் தொடக்க நாயகனான ஜெகதீசன் மற்றும் கேப்டனான விஜய் ஷங்கர் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அதனால் தமிழக அணிக்கு தோல்விதான் என்று பலரும் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஓப்பனிங் பேட்ஸ்மேனான அபரஜித் 124 பந்தில் 122 ரன்களை அடித்தார். அதனால் தமிழக அணிக்கு வெற்றியின் வாய்ப்பு கிட்டதட்ட உறுதியானது.

இருந்தாலும் தமிழக அணி போராடி கொண்டு தான் விளையாடி வந்தது. பின்னர் இறுதி ஓவர் இறுதி பந்து வரை போராடி இறுதியாக 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 314 ரன்களை அடித்து வெற்றி பெற்றுள்ளது தமிழக அணி. அதில் இந்திரஜித் 50, தினேஷ் கார்த்திக் 31, வாஷிங்டன் சுந்தர் 70, ஷாருக்கான் 17, சாய் கிஷோர் 12 ரன்களை அடித்துள்ளனர். அதனால் இப்பொழுது தமிழக அணி இறுதி போட்டிக்கு முன்னெறியுள்ளது.

வருகின்ற 26ஆம் தேதி அன்று ரிஷி தவான் தலைமையிலான இமாச்சலப் பிரதேச  அணியும் விஜய் ஷங்கர் தலைமையிலான தமிழக அணியும் மோத உள்ளனர். அதில் தமிழக அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லுமா?? பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!!! இவ்வளவு தோறும் கடினமாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழக அணிக்கு வாழ்த்துக்கள்….!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here