புதிய பிளான் போட்ட BCCI ..!இளம் வீரர்களை இந்திய அணியில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதா ?? முழு விவரம் இதோ..!

WTC 2021: வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் வெற்றிக்கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்று கிரிக்கெட் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்திய அணி விவரம் இதோ:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ரஹானே (துணை கேப்டன்), புஜாரா, மயங்க அகர்வால், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ராஹ்,ரிஷாப் பண்ட், ரவி சந்திரா அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷாமி, முகமது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ் கே.எல்.ராகுல், சஹா இடம் பெற்றுள்ளனர்.

எந்த எந்த போட்டிகளில் இந்திய பங்கேற்க போகிறது ?

வருகின்ற ஜூன் 18ஆம் முதல் ஜூன் 22ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், அதன்பின்னர் 4ஆம் தேதி ஆகஸ்ட் முதல் 14ஆம் தேதி செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்து அணிக்கு ஏஹ்திரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட போகிறது இந்திய அணி.

இலங்கை அணிக்கு எதிரான போட்டிகள் விவரம் இதோ;

வருகின்ற ஜூலை மாதத்தில் இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய போகிறது இந்திய அணி. அதில் இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி-20 போட்டிகள் நடைபெற போவதாக தகவல் வெளியானது. அதில் எந்த எந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை.

ஆனால் இலங்கைக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இடம்பெற மாட்டார்கள் என்று கூறியுள்ளனர் பிசிசிஐ. ஆனால் அதில் இந்திய B அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடும் என்றும் அதில் ஹார்டிக் பாண்டிய, பிருத்வி ஷாவ், தேவ்தத் படிக்கல், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.