இந்திய அணியில் தோனிக்கு நடந்தது தான், இப்போ கேஎல் ராகுலுக்கும் நடக்குது; முன்னாள் பாக்., கேப்டன் சொன்ன சீக்ரெட்!!

0

ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக மூத்த வீரர்களை விட்டுவிட்டு, கேஎல் ராகுல் நியமிக்கப்பட காரணம் இதுதான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பேட்டியளித்துள்ளார்.

இந்திய அணி தென்ஆப்பிரிக்கா உடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது. மீதம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இதற்கு அடுத்ததாக ஒரு நாள் போட்டிக்கான தொடர் துவங்க இருக்கிறது. 

ஜனவரி 19ஆம் தேதி துவங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி, கடந்த 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ரோகித்சர்மா இன்னும் குணமடையாததால் ஒருநாள் தொடரிலும் இடம்பெறவில்லை. இதனால் புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதேநேரம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

அணியில் அனுபவமிக்க வீரர்கள் இருக்கும்போது எதற்காக கேஎல் ராகுலிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது என கேள்விகள் பல முன்வைக்கப்பட்டிருந்தன. 

இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், ராகுலுக்கு எப்படி கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். “இந்திய அணியில் ஒரு வழக்கமிருக்கிறது. பொதுவாக கேப்டன் இல்லாத பொழுது துணை கேப்டனுக்கு தற்காலிக கேப்டன் பதவி கொடுக்கப்படும். அந்த வழக்கத்தை மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்திருக்கிறது. சிறிய அணிகளுடன் விளையாடும் பொழுது, கேப்டனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு துணை கேப்டனுக்கு தற்காலிக கேப்டன் பதவி கொடுத்து, இந்திய அணி நிர்வாகம் பரிசோதிக்கும் வழக்கத்தை கொண்டு இருக்கிறது. 

இதற்கு முன்னதாக மூத்த வீரர்கள் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பொழுது, அப்போது இளம் வீரராக இருந்த மகேந்திர சிங் தோனிக்கு கேப்டன் பதவி இப்படித்தான் கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதேபோன்று ராகுலுக்கும் இப்போது கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. தென்ஆப்பிரிக்கா அணி முன்பை போல வலுவான நிலையில் இல்லை.

இப்போது கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்து பரிசோதிப்பது சரியானதாக இருக்கும். அதனடிப்படையில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது. மேலும் மற்றொரு இளம் வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு முக்கிய பொறுப்பை கொடுத்து, அவர்களுக்கு அணியில் முக்கியத்துவமும் கொடுக்கபட்டு வருவது எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.” என்றார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here