நேற்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சாகிப் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

போட்டியின் விவரம் :
முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் வழக்கம் போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மா எதிர்பாராத வகையில் 2 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
ஆனால், மிடில் ஆர்டரில் விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி 90க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 184 ரன்களை அடித்தது இந்திய கிரிக்கெட் அணி.

அதில் கே.எல்.ராகுல் 50, ரோஹித் சர்மா 2, விராட்கோலி 64*, சூர்யகுமார் யாதவ் 30, ஹர்டிக் பாண்டிய 5, தினேஷ் கார்த்திக் 7, அக்சர் பட்டேல் 7 ரன்களையும் அடித்துள்ளனர். பின்பு 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பங்களாதேஷ் அணி.
தொடக்க வீரரான லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தார். அதனால் இந்தியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, இந்திய அணி வெற்றிபெறுவது சந்தேகம் ஆனது. ஆனால் முதல் இரு விக்கெட்டை கைப்பற்றிய இந்திய அணிக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.
பின்பு மழை பெய்த காரணத்தால் போட்டியை 16 ஓவருக்கு குறைத்து 151 ரன்கள் அடித்தால் போதும் என்று முடிவு செய்தனர். ஆனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த பங்களாதேஷ் அணியால் ரன்களை அடிக்க முடியாமல் போனது. இறுதிவரை போராடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 145 ரன்களை அடித்தனர்.

இதில் நஜ்முல் ஹொசைன் 21, லிட்டன் தாஸ் 60, சாகிப் 13, நூருல் ஹசன் 25* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதனால் 5 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது இந்திய. புள்ளிபட்டியலில் 6 புள்ளிகளை பெற்ற இந்திய அணி முதல் இடத்திலும் பங்களாதேஷ் அணி 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; “போட்டியில் என்ன நடக்க போகிறது என்ற பதற்றத்துடன் தான் நான் விளையாடி கொண்டு வந்தேன். அதனை விட முக்கியமான ஒன்று நம்முடைய பிளான்-ஐ சரியாக செயல்படுத்த வேண்டுமென்று தான்.”
“முதலில் அவர்களிடம் 10 விக்கெட்டை கையில் வைத்திருந்தனர், அதனால் வெற்றிக்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால் இடைவெளிக்கு பிறகு நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நாங்கள் அர்ஷதீப் சிங்-யிடம் சில விஷயங்களை கேட்டோம். ஏனென்றால் டெத் ஓவரில் பவுலிங் பும்ரா அணியில் இல்லை.”

“அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களில் ஒருவர் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு சரி செய்ய வேண்டும். அதனால் அர்ஷதீப் சிங்-ஐ அதற்கு ஏற்ப தயார் செய்தோம். கடந்த 9 மாதமாகவே அதனை செய்து வருகிறார் அர்ஷதீப் சிங். அந்த இடத்தில் ஷமி ஆ ? அர்ஷதீப் சிங் ஆ? என்ற குழப்பம் இருந்தது. ஆனால் முன்பு யார் சிறப்பாக பவுலிங் செய்தாரோ அவருக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.”
“இந்த உலகக்கோப்பை போட்டியில் விராட்கோலியின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. அதனால் அவருடைய போர்ம் பற்றிய கவலை எங்களுக்கு எப்பொழுதும் கிடையாது. இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் அருமையாக இருந்தது. ஏனென்றால் இந்த மாதிரியான போட்டிகளில் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை என்றால் போட்டியில் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”
0 Comments