நான் இருக்கும்வரை இதை மட்டும் செய்யவே மாட்டேன் ; பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ; முழு விவரம் இதோ

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது நியூஸிலாந்து அணிக்கு தொடக்கத்தில் சற்று சோர்வான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் குப்டில் 70, மிச்சேல் 0, சாப்மேன் 63, க்ளென் பிலிப்ஸ் 0, டிம் சேபிரட் 12, ராச்சின் ரவீந்திர 7, மிச்சேல் சண்ட்னர் 4 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய அணி. அதில் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி ஓவர் வரை போராடி 166 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதில் கே.எல்.ராகுல் 15, ரோஹித் சர்மா 48, சூர்யகுமார் யாதவ் 62, ரிஷாப் பண்ட் 17, ஸ்ரேயாஸ் ஐயர் 5, வெங்கடேஷ் ஐயர் 4, அக்சர் பட்டேல் 1 ரன்களை அடித்துள்ளனர்.

முதல் முதலில் பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ; எங்களுக்கு இந்த போட்டி தான் முக்கியம் , அந்த போட்டி முக்கியம் இல்லை என்று நாங்கள் சொல்லவே மாட்டோம். ஏனென்றால் கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து டீம் விளையாட்டிலும் மிகப்பெரிய வீரர்கள் அனைவரும் அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள்.

கிரிக்கெட் போட்டியில் மூன்று வடிவமாக போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட். அதில் இந்த விளையாட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்தது இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், ஒரு சிலர் வீரர்களுக்கு டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் ஆனால் ஒரு சிலர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்……!!!