HomeTrending Newsஎப்படி விராட்கோலி-யை இவருடன் ஒப்பிட்டு பேச முடியும் ; வெறும் 4 போட்களில் மட்டுமே விளையாடியுள்ளார்...

எப்படி விராட்கோலி-யை இவருடன் ஒப்பிட்டு பேச முடியும் ; வெறும் 4 போட்களில் மட்டுமே விளையாடியுள்ளார் ; முன்னாள் வீரர் பேட்டி ;

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டி :

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருந்தன. அதில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வென்றதால் டெஸ்ட் போட்டிக்கான தொடர் சம நிலையில் முடிந்தது.

ஆனால் டி-20 போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்து காரணத்தால் தொடரை கைப்பற்றியது இந்திய. இப்பொழுது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் விராட்கோலி பெரிய அளவில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது தான் உண்மை.

ஆமாம், டெஸ்ட் போட்டியில், இரு டி-20 போட்டிகளிலும் மிகவும் மோசமான நிலையில் ஆட்டம் இழந்தார். இனிவரும் போட்டிகளில் அவருக்கு பதிலாக மற்ற வீரர்களை விளையாட வைக்க வேண்டும் .? அவரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பலர் அவரவர் கருத்துகளை கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, தீபக் ஹூடா மாறும் விராட்கோலியை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா கூறுகையில் ; “பல சாதனைகளை செய்த ஒரு வீரர் தான் விராட்கோலி. இப்பொழுது அவரது போரம்மை வைத்து ஒருவீரரை பற்றி முடிவு செய்ய கூடாது.”

“ஏனென்றால் இது அனைவர்க்கும் நடக்கும்.விராட்கோலி இன்னும் ஒரு சிறப்பாக போட்டிக்கு முன்பு உள்ளார். அவர் மட்டும் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாட தொடங்கினால் நிச்சியமாக கம்பேக் கொடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமின்றி, தீபக் ஹூடா 3, 4 சர்வதேச போட்டிகளில் தான் விளையாடியுள்ளார்.”

“பெரிய பெரிய போட்டிகளில் விளையாட வரும்போது நிச்சியமாக அனுபவம் தேவையாக உள்ளது. அதனால் விராட்கோலி, தீபக் ஹூடா என்று பேசுவது சரியில்லை. ஏனென்றால் விராட்கோலி நிச்சியமாக ப்ளேயிங் 11ல் நேரடியாக இடம்பெற்று விளையாடுவார், ஆனால் தீபக் ஹூடா அப்படி இல்லை.” என்று கூறியுள்ளார் பியூஸ் சாவ்லா.”

விராட்கோலி கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆகி, இதுவரை மொத்தம் 70 சதம் அடித்துள்ளார். அதில் இறுதியாக 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த விராட்கோலியால் கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்கமுடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img