இந்திய கிரிக்கெட் அணியில் இது கிடையவே கிடையாது..! உறுதியாக சொல்கிறார் ; சுனில் கவாஸ்கர்….!! முழு விவரம் இதோ ..!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்து பேசியுள்ளார். அதுவும் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக வளர்ந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை – சுனில் கவாஸ்கர்.

முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய அணியை பாராட்டி உள்ளார். இப்பொழுது இருக்கும் இந்திய அணி விராட்கோலி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது இந்திய அணி.

எப்பொழுது ஒரு அணியை மற்ற அணிகளுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் கடினம் என்று எல்லாருக்கும் தெறியும். அதேபோல, இப்பொழுது இருக்கும் இந்தியா அணி மிகவும் சிறப்பான அணி தான். ஏனென்றால் சரியான சமநிலையில் உள்ளது. பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய அனைத்திலும் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார் இந்திய அணி.

கடந்த 1960ஆம் ஆண்டில் இருந்து நன் கிரிக்கெட் போட்டிகளை கவனித்து கொண்டு தன வருகிறேன். இப்பொழுது இருக்கும் இந்திய அணிதான் மிகவும் சிறப்பாக இருக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு வீக்னஸ் கிடையாது என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இதன் போட்டி ஜூன் 18ஆம் ஆண்டு முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சமீபத்தில் இந்திய அணிக்காக வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா, சுமன் கில், மயங்க அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷாப் பண்ட், ரவி சந்திரா அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது சிராஜ் ,முகம்மது ஷாமி , தாகூர், உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.