IPL 2021 போட்டி அவ்ளோதானா…! சோகத்தில் மூழ்கிய IPL ரசிகர்கள் ..! BCCI -யின் அதிரடி முடிவு….!

ஐபிஎல் 2021, போட்டி கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக போட்டியை பாதியில் நிறுத்தி அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது பிசிசிஐ.

யாருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது ?

மே 4ஆம் தேதி ஆண்டு ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத இருந்தனர். ஆனால் அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீர்ரகள் சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

அதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக அனைத்து அணி வீரர்களுக்கும் காரோண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு, சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியில் ஒருவருக்கு, டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக 29 போட்டிகள் முடிந்த நிலையில் ஐபிஎல் 2021 போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தியது பிசிசிஐ.

ஐபிஎல் 2021யின் மீதமுள்ள 31 போட்டிகள் நடக்குமா இல்லையா ?

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ-யின் தலைவர் கங்குலி, இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை போட்டிக்கான இடத்தை நாங்கள் யோசித்து வருகிறோம். ஏனென்றால் 2011ஆம் ஆண்டு இந்த பொறுப்பு இந்தியாவிடம் வந்தது.

அதன்பிறகு இப்பொழுது மீண்டும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியை நடத்த நம்மிடம் பொறுப்பை கொடுத்துள்ளது. அதனால் பிசிசிஐ குழு எல்லாரும் அதனை யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார் கங்குலி. அதுமட்டுமின்றி மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கங்குலி ; ஐபிஎல் 2021யின் போட்டிகளை பற்றி இப்பொழுது யோசிக்க முடியாது. ஏனென்றால் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை டெஸ்ட் போட்டிகளை நடைபெற உள்ளன. அதுமட்டுமின்றி சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் வீரர்கள் உலகோப்பைக்கு பயிற்சி செய்ய வேண்டும்.

அதனால் இப்போதைய நிலைமையில் ஐபிஎல் 2021 பற்றி பேசவும் முடிவு எடுக்கவும் முடியாது என்று கூறியுள்ளார் கங்குலி. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் 2021ளின் மீதமுள்ள 31 போட்டிகள் நடக்குமா இல்லையா ?? உங்கள் கருத்து என்ன ?