HomeTrending Newsஅட்டகாசமான 15 பேர் கொண்ட வீரர்களுடன் ஆசிய கோப்பையில் களமிறங்க போகும் இந்திய கிரிக்கெட் அணி...

அட்டகாசமான 15 பேர் கொண்ட வீரர்களுடன் ஆசிய கோப்பையில் களமிறங்க போகும் இந்திய கிரிக்கெட் அணி இதுதான் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய டி-20 கோப்பைக்கான போட்டிகள் இந்த மாதம் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 13 போட்டிகளை கொண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த இரு ஆண்டுகளாகவே ஐபிஎல் டி-20 போட்டிகள் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் தான் நடந்து வருகிறது. அதனால் மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணிக்கு இதில் கொஞ்சம் பலன் அதிகம் உள்ளது.

இதில் மொத்தம் இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஒரு அணிகள் என்ற கணக்கில் மொத்தம் ஆறு அணிகளை கொண்டு ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி மற்ற அணிகள் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்த நிலையில் இன்னும் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் 15 பேர் கொண்ட அணியின் விவரத்தை அறிவிக்கவில்லை ; அதனால் இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது தான் உண்மை.

இந்திய அணியின் உத்தேச விவரம் இதோ :

பேட்ஸ்மேன்கள் : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இதில் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போனது. ஒருவேளை கே.எல்.ராகுல் அணியில் இல்லாத நேரத்தில் சஞ்சு சாம்சன் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

விக்கெட் -கீப்பர் : தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் 2022 போட்டியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியின் டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி வருகிறார்.

பவுலர்கள்: இதில் ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால், புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் பவுலராக இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதில் 23 வயதான அர்சத்தீப் சிங் இடது கை பவுலர் என்றதால் இந்திய அணிக்கு தேவையான ஒரு வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனால் நிச்சியமாக அவர் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆல் – ரவுண்டர் : ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்டிக் பாண்டிய, தீபக் ஹூடா,ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார் போன்ற வீரர்கள் ஆசிய கோப்பையில் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதில் ஹர்ஷல் பட்டேலுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருடைய இடத்திற்கு தீபக் சஹார் தான் சரியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் அவ்வவ்போது தீபக் சஹார் அட்டகாசமாக பேட்டிங் செய்தும் வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img