இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இருக்க போகும் 4 இந்திய வீரர்கள்…! ஐயோ இவர்களா ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

அதன்பிறகு, இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. சமீபத்தில் பிசிசிஐ இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 20 பேர் கொண்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அதிலும் சில வீரர்களுக்கு இடம் 11 பேர் கொண்ட அணியில் இடம்கிடைக்குமா என்பது கேள்வி குறியாக இருக்கிறது.

விருத்திமான் சஹா :

இன்னும் சில நாட்களில் நடக்க போகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம்பெற்றுள்ளார் விருத்திமான் சஹா. சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார் விருத்திமான் சஹா.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார். அதன்பிறகு விருத்திமான் சஹா பேட்டிங் திறன் சரியாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது அதனை சரி செய்ய ரிஷாப் பண்ட் உள்ளார்.

ஷர்டுல் தாகூர்:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்டுல் தாகூர், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் பவுலிங் செய்து விக்கெட்டை எடுத்து மட்டுமின்றி பேட்டிங் செய்து ஆல் -ரவுண்டர் என்று நிரூபித்து விட்டார்.

ஆனால் இந்திய அணியில் அதிகமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதில் முகம்மது சிராஜ், முகம்மது ஷாமி மற்றும் பும்ரா போன்ற முன்னணி அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஒருவேளை ஏதாவது வீரருக்கு அடிபட்டால் உமேஷ் யாதவ் இருப்பர். அதனால் தாகூருக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை.

வாஷிங்டன் சுந்தர்:

இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர். இதுவரை 265 ரன்களை எடுத்துள்ளார் அதிலும் 4 டெஸ்ட் போட்டிகளில், அதுவும் 3 அரைசதம் என்ற கணக்கில் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 6 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இருந்தாலும் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.

அதனால் நிச்சியமாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவதில்லை என்று தெரிகிறது. ஒருவேளை ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு ஏதாவது அடிபட்டால் நிச்சியமாக வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்குமா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

அக்சர் பட்டேல் :

சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேல் சிறப்பான முறையில் பந்து வீசியுள்ளார். அதில் விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டியிலும் ஐந்து விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் அக்சர் பட்டேல்.

இந்திய அணியில் வலுவான சூழல் ஆபத்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளனர். அதனால் இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு போதுமானதாக தெரிகிறது. அதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேல் விளையாடுவது வாய்ப்பு மிகவும் குறைவுதான்.