இந்திய அணிக்கு இது மிகவும் முக்கியம் வெற்றி பெற ; அஜிட் அகர்வால் பேட்டி ; குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி ? ஏன் தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணிக்கு வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தான் முதல் ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் விளையாட போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகிறது.

அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் எனபதால் சந்தேகமில்லை. இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிட் அகர்வால் அளித்த பேட்டியில் ; ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்தே ஆக வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்திய அணிக்கு ஐந்து பவுலர்கள் அணியில் இருப்பார்கள்.

சூழ்நிலை பொறுத்துதான் பவுலிங் செய்வதில் மாற்றம் செய்ய வேண்டும். அப்படி பார்த்தால் குறைந்தது ஐந்து பவுலர்கள் தேவை படுகிறது. ஒருவேளை ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்யவில்லை என்றால், இவர்கள் 6 பேர் தான் பவுலிங் செய்ய சரியான வீரர்கள். அதில் ” பும்ரா, ஷர்டுல் தாகூர், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவத்தி மற்றும் ராகுல் சஹார்” போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார் அஜிட் அகர்வால்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், அஜிட் குறிப்பிட்ட பவுலர்களில் வருண் சக்ரவத்தி, ஜடேஜா மற்றும் தாகூர் போன்ற வீரர்கள் பவுலிங் செய்யவில்லை. அதில் பும்ரா 1 விக்கெட் மற்றும் 26 ரன்களை கொடுத்துள்ளார்.

பின்னர், ஷமி 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, ராகுல் சஹார் ஒரு விக்கெட்டை கைப்பற்றினாலும், அது மிகப்பெரிய பேட்ஸ்மேன் டேவிட் மலன் விக்கெட்டை கைப்பற்றினார். அதனால் அஜிட் அகர்வால் சொன்னது போல 6 பவுலர்கள் இந்திய அணியில் இடம்பெற போகிறார்களா ??

விராட்கோலி மற்றும் ஆலோசகராக இருக்கும் தோனி என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக அறிவித்துள்ளது பிசிசிஐ.

உலகக்கோப்பை போட்டியில் விளையாட போகின்ற இந்திய அணியில் எத்தனை பவுலர்கள் இடம்பெற வேண்டும். அதில் யார் யார் இருக்க வேண்டும் என்று உங்கள் கருத்தை COMMENTS பண்ணுங்க…!!