விராட், ரோஹித் இல்லை ; உலககோப்பை டி-20 போட்டிகளில் இந்த ஐந்து வீரர்கள் தான் அட்டகாசமாக பேட்டிங் செய்ய போகின்றனர் ; வாட்சன் ஓபன் டாக் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பைக்கு போட்டிக்கு பிறகு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பிடித்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அது அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடைபெற போவதாக ஐசிசி கூறியுள்ளது. இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற போவதால் அதற்கு ஏற்ப வீரர்களை அனைத்து அணிகளும் தயார் செய்து வருகின்றனர்.

ஆசிய கோப்பையில் வெறும் 6 அணிகளை கொண்டு தான் நடைபெற உள்ளது. ஆனால் உலகக்கோப்பை போட்டிகளில் முக்கியமான அணிகள் அனைத்து கலந்துகொள்ளவதால் நிச்சியமாக விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது. ஒரு போட்டி நடைபெற்றால் அதனை பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான வாட்சன் சில முக்கியமான தகவலை கூறியுள்ளார். அதில் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்த ஐந்து வீரர்கள் தான் டாப் 5 இடத்தில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். அதில் ஒரு இந்திய வீரரை தேர்வு செய்துள்ளார்.

அதனை பற்றி பேசிய வாட்சன் கூறுகையில் ; “நான் முதலில் பாகிஸ்தான் வீரரான பாபர் ஆசாம்-ஐ தான் தேர்வு செய்ய நினைக்கிறன். ஏனென்றால் இவர் தான் கிரிக்கெட் உலகில் நம்பர் 1 வீரர். எந்த ரிஸ்க் எடுக்காமல் ரன்களை குவித்து வருகிறார். அதுவும் உலக புகழ் பெற்ற பவுலர்களை சுலபமாக சமாளித்து ரன்களை விளாசி வருகிறார்.”

“அதேபோல தான் இந்த ஆண்டு உலகக்கோப்பை (ஆஸ்திரேலியாவில்) சிறப்பாக தான் விளையாட போகிறார். அடுத்தது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி தான், ஆனால் எதிர்பாராத வகையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சியமாக அவர் தான் டான், இந்த உலகக்கோப்பை போட்டியில். இவருக்கு நான் 5வது இடத்தை கொடுக்கிறேன்.”

“அடுத்ததாக இந்திய அணியின் வீரரான சூரியகுமார் யாதவ் , இவரது பேட்டிங் எப்பொழுதும் அதிரடியாகவே தான் இருக்கும். அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வலுவாக தான் இருக்கும். இவருக்கு நான் இரண்டாவது இடத்தை கொடுக்கிறேன்.”

மற்ற இரு இடங்களில் ஆஸ்திரேலியா வீரரான வாட்சன் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை தேர்வு செய்துள்ளார் வாட்சன். அதில் “டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த போது அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் வார்னர் தான் அதிக ரன்களை விளாசியுள்ளார்.”

“அடுத்தது இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோஸ் பட்லர் தான், கடந்த ஐபிஎல் 2022யில் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமின்றி இவரை யாராலும் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் பல போட்டிகளில் தவித்துள்ளனர். அதனால் நிச்சியமாக ஆஸ்திரேலியாவில் எந்த முன்னணி பவுலர் பந்தை வீசினாலும் நிச்சியமாக இவரால் அடிக்க முடியும் என்று கூறியுள்ளார் வாட்சன்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here