சமீபத்தில் இந்திய அணியில் அறிமுகம் ஆகி இப்பொழுது வாய்ப்பு கிடைக்காமல் தவித்து நான்கு வீரர்களின் பட்டியல் இதுதான் ;

0

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி முன்பு போல் இல்லாமல் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் டி-20 லீக் பேட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுத்து வருகிறது பிசிசிஐ.

அந்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது வீரர்களின் கையில் தான் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் உள்ளனர். ஒரே நேரத்தில் இரு நாடுகளுடன் விளையாட கூடிய அளவிற்கு இந்திய அணியில் வீரர்கள் இருக்கின்றனர். அதனால் முக்கியமான போட்டியான ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு சில முக்கியமான வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

அப்படி சமீபத்தில் இந்திய அணியில் அறிமுகம் ஆகி வாய்ப்பு இழந்து தவிக்கும் முக்கியமான ஐந்து வீரர்கள் இவர் தான்;

வெங்கடேஷ் ஐயர்:

ஐபிஎல் 2021ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரராக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தார். அதனால் 2021ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்தனர். அதேபோல தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

அதுமட்டுமின்றி, காயம் காரணமாக இந்திய அணியில் விலகியிருந்த ஹர்டிக் பாண்டியாவின் இடத்தில் தான் வெங்கடேஷ் ஐயர் இடம்பெற்று விளையாடி வந்தார். பின்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதுவரை 9 டி-20 போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 133 ரன்களை அடித்துள்ளார். அவ்வப்போது பவுலிங் செய்து 5 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

ராகுல் சஹார் ;

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளராக வளம் வந்தார் ராகுல் சஹார். 23 வயதான இவர் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் நிச்சியமாக இருக்க விளையாட வேண்டுமென்று உடனடியாக தேர்வு செய்தனர். ஆனால் அவருக்கான வாய்ப்பு சரியாக கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை லீக் போட்டிகளில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது தான் இறுதி போட்டி. அதன்பிறகு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் ராகுல் சஹார். இந்திய அணியில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் இன்னும் விளையாடி வருவதால் இவர்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

வருண் சக்கரவத்தி:

தமிழக வீரரான இவரும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் தான் உலககோப்பைக்கு போட்டிக்கான இந்திய அணியில்இடமபெற்றார். மிஸ்டரி ஸ்பின்னர் என்று அழைக்கபடும் இவர் உலகக்கோப்பை 2021 போட்டிக்கான ப்ளேயிங் 11ல் இடம்பெற்று விளையாடி வந்தார்.

ஆனால் பெரிய அளவில் ரன்களை கட்டுப்படுவதவும் இல்லை, விக்கெட்டையும் கைப்பற்றவில்லை என்பது தான் உண்மை. இறுதியாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெற்று விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார் வருண். இருப்பினும் பவுலிங் எகானமி 5.86 என்ற கணக்கில் பவுலிங் செய்து வருகிறார் வருண்.

நட்ராஜன் :

தமிழக வீரரான இவர் ஐபிஎல் 2020 போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்து யாக்கர் மன்னன் என்ற ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதில் சிறப்பாக விளையாடி உள்ளார் நட்ராஜன். ஆனால் இப்பொழுது சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளிலும் காயம் காரணமாக பெரிய அளவில் விளையாடவில்லை. ஆனால் இந்த ஐபிஎல் 2022ல் சிறப்பாக விளையாடி பல விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடிய நட்ராஜன் உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் இடம்பெற வேண்டுமென்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் நட்ராஜன் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here