இந்திய அணியில் புதிதாக நான்கு வீரர்கள் இடம்பெற போகிறார்கள் ; ஐயா ஜாலி இனிமேல் இந்திய அணியை அசைக்கவே முடியாது ..!

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 போட்டிகள் கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஆரம்பித்து மே 30 வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தீடிரென்று சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக போட்டிகளை தாற்காலிகமாக நிறுத்தியது பிசிசிஐ.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த போட்டிகளும் இல்லை என்று சோகத்தில் மூழ்கினார். ஆனால் இப்பொழுது கிரிக்கெட் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது.

வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் மோத உள்ளன. இந்த இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

பின்பு சில நாட்கள் கழித்து மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி. இந்த போட்டிகளும் இங்கிலாந்து நாட்டில் தான் நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக இந்தியாவுக்கு வந்து மீண்டும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றால் தோற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் இங்கிலாந்து நாட்டிலேயே இருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் நடைபெற போகிறது. பிசிசிஐ -யின் புதிய திட்டத்தின் மூலம் இந்திய அணியின் பி பிரிவு இலங்கை அணியை எதிர்கொள்ளும் என்ற தகவல் வெளியானது. அதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பெற வாய்ப்பு கிடையாது. ஏனென்றால் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள போகிறார்கள்.

இந்திய அணியில் அவ்வவ்போது இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல இப்பொழுது இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதலில்

வருண் சக்ரவத்தி :

இந்த ஆண்டு 2021 தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் வருண் சக்ரவத்திக்கு இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் அவருக்கு அடிபட்டுவிட்டதால் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

கடந்த இரு ஆண்டுகளாக வருண் சக்கரவத்தி சிறப்பான முரையில் பந்து வீசி வருகிறார். இலங்கைக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவத்திக்கு வாய்ப்பு கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் திவேதிய :

அடுத்த படியாக ராகுல் திவேதிய இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிகபட்ச ரன்களை எடுத்து கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அவ்வவ்போது சூழல் பந்து வீச்சால் சில முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

ரவி பிஷ்னாய் :

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்ற ரவி பிஷ்னாய் 6 போட்டிகளில் 17 விக்கெட்டை எடுத்துள்ளார். அதிலும் அவர் தான் அதிக விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 பஞ்சாப் அணியில் 2 கோடி ரூபாய் கொடுத்து ரவி பிஷ்னாய்வை வாங்கியுள்ளனர்.

ஹர்ஷல் பட்டேல் :

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 7 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டை கைப்பற்றி அதிக விக்கெட் எடுக்கும் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார் ஹர்ஷல் பட்டேல். அதனால் இவருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் விளையாட அதிகம் வாய்ப்பு உள்ளது.