சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற போகும் 4 முக்கியமான வீரர்கள் …! என்ன செய்ய போகிறது சென்னை அணி..! கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளதா ??

ஐபிஎல் 2021: கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆண்டு ஐபிஎல் 2021 இந்தியாவில் சிறப்பான முறையில் தொடங்கியது. ஆனால் பாதி போட்டியால் நடந்து நடந்த முடிந்த நிலையில் 31 போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்தது பிசிசிஐ. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்.

தற்காலிகமாக நிறுத்திய ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது. அதுவும் இந்தியாவுக்கு பதிலாக இந்த முறை ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. அதுவும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 50% மக்களை மட்டுமே மைதானத்தில் பார்க்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஐபிஎல் 2021 ஐக்கிய அரபு நாட்டில் விளையாட போவது இல்லை என்று பல வெளிநாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதிலும் முக்கியமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அளித்த பேட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் யாரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

அப்படி ஒருவேளை நடந்தால் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் மோசமான நிலையில் இருந்தது சிஎஸ்கே அணி. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021, இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதற்கு முக்கியமான காரணம் பேட்டிங் ஆர்டர் தான். 3வதாக களமிறங்கும் பேட்ஸ்மேனான மொயின் அலி சிறப்பாக முறையில் பேட்டிங் செய்துள்ளார், அதனை யாராலும் மறுக்க முடியாது. அதேபோல பவுலிங் செய்து முக்கியமான நேரத்தில் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

அதேபோல தாம் சாம் கரனும் ஆல் -ரவுண்டரான இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் இவரது ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்துள்ளது. பல போட்டிகளில் ஆட்டத்தை மாற்றி சிஎஸ்கே அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்படி பார்த்தல் மொயின் அலி, சாம் கரன் , ஜேசன் மற்றும் மிட்சல் சாண்ட்னெர் வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகளில் சிஎஸ்கே அணியில் விளையாடுவது மிகவும் கடினம். அதனால் இவர்களுக்கு பதிலாக யார் சிஎஸ்கே அணியில் இடம்பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.