இந்திய அணியின் மிகப்பெரிய Weakness இதுதான் ; சரி செய்யவில்லை என்றால் எந்த போட்டியிலும் தோல்வி தான் ; முன்னாள் இங்கிலாந்து வீரர் உறுதி ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் ;

சமீபத்தில் தான் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20, ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்திய அணி டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் வென்று கோப்பையை வென்றது.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான யோப் ஆர்டர் அமையவில்லை என்பது தான் உண்மை. ஆமாம், ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தால் நிச்சியமாக அது இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆபத்தாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்திய கிரிக்கெட் பல Weakness உள்ளது. அதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசைன், இந்திய அணியின் வீக்னெஸ் பற்றி பேசியுள்ளார்.

அதில் ” இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் இடது காய் வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை எதிர்கொண்டு விளையாட வேண்டும். ஏனென்றால் வரலாற்றை எடுத்து பார்த்தால் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் வீரரான ஷாஹீன் அப்ரிடி (இடது கை) பவுலரின் கையில் விக்கெட்டை இழந்தனர்.”

“அதேபோல தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியை சேர்ந்த ரீஸீ டாப்லே பவுலிங்கிலும் விக்கெட்டை இழந்தது இந்திய. இந்திய கிரிக்கெட் அணி வலுவான அணிதான். ஆனால் கடந்த காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை சரி செய்து விளையாட வேண்டும்.”

“உலககோப்பை போட்டிக்கான இந்திய அணியை பற்றி பேசிய நாசர் கூறுகையில் ; இந்திய கிரிக்கெட் அணி தயாராக தான் உள்ளனர், விராட்கோலி மட்டும் சில ஓய்வுக்கு திரும்பினால் நிச்சியமாக அவரால் சிறப்பாக விளையாட முடியும். இன்னும் ஐசிசி கோப்பை போட்டிகள் தொடங்குவது மட்டும் தான் மீதமுள்ளது.”

“அது தொடங்கினால் நிச்சியமாக அவர்களால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசைன்.” உலகக்கோப்பை போட்டிக்கான இந்தியா அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் என்னவாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here