HomeTrending Newsஇவங்க இருவரின் பேட்டிங் தான் எங்களுக்கு அணிக்கு முக்கியமான turning பாயிண்ட் ; இல்லையென்றால் தோல்வி...

இவங்க இருவரின் பேட்டிங் தான் எங்களுக்கு அணிக்கு முக்கியமான turning பாயிண்ட் ; இல்லையென்றால் தோல்வி தான் ; பாபர் அசாம் பேட்டி ;

நேற்று இரவு 7:30 மணியளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் , ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இந்திய அணி முதலில் ரன்களை டார்கெட் வைக்க முடிவு செய்து களமிறங்கினார்கள். தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் பவர் ப்ளேவில் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்.

ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பிறகு ரன்களை அடித்த வேகம் அப்படியே குறைந்தது. இருப்பினும் விராட்கோலி விளையாடிய அதிரடியான அரைசதம் அடித்தார். ஆனால் அதற்கு பிறகு எந்த பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாட காரணத்தால் ரன்களை குறைந்தது.

முதல் 10 ஓவரில் 10 ரன்கள் என்ற கணக்கில் அடித்து கொண்டு வந்தது இந்திய.ஆனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 181 ரன்களை அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 28, ரோஹித் சர்மா 28, விராட்கோலி 60, சூரியகுமார் யாதவ் 13, ரிஷாப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரரான பாபர் அசாம் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருப்பினும் ரிஸ்வானின் அதிரடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு ரன்கள் குவிந்தன. இறுதி ஓவர் வரை விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 182 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.

அதில் ரிஸ்வான் 71, பாபர் அசாம் 14, ஜமான் 15, நவாஸ் 42, ஆசிப் அலி 16 ரன்களை அடித்துள்ளனர். அதனால் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் உள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் ; ” எல்லாப்போட்டிகளிலும் ஏற்றம் இறக்கம் இருக்க தான் செய்யும்.”

“ஆனால் இந்திய அணி பவர் ப்ளேவை சிறப்பாக பயன்படுத்திவிட்டனர். அதன்பின்னர் எங்கள் பவுலர்கள் சிறப்பாக கம்பேக் கொடுத்தனர். இருப்பினும் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் ரிஸ்வான் மற்றும் நவாஸ் விளையாடிய இன்னிங்ஸ் தான். அதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையே என்று கூறியுள்ளார் பாபர் அசாம்.”

அதிரடியாக விளையாடி கொண்டு வரும் பாபர் அசாம் இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை. தொடர்ந்து குறைவான ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்து வருகிறார். இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வெறும் 33 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img