ஐபிஎல் 2021: கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகள் சிறப்பான முறையில் இந்தியாவில் ஆரம்பித்தது. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் ட-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் நடந்து வருகிறது.
ஐபிஎல் 2021, 29 போட்டிகள் முடிந்த நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியானது. அதனால் உடனடியாக ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்து அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பி வைத்துள்ளது பிசிசிஐ.
பின்பு இப்பொழுது மீண்டும் மீதமுள்ள போட்டிகளை வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதுவும் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி முதல் போட்டி செப்டம்பர் 19ஆம் அன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அதிலும் சில அணிகளில் கேப்டன் மாற்றம் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. அதிலும் இந்த மூன்று அணிகளுக்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதில் முதலில்,
டெல்லி கேபிட்டல்ஸ் :
கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான முறையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்தி வந்தார். அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு புள்ளிபட்டியலில் டாப் 4 வது இடத்துக்குள் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் கையில் பலமான அடிபட்டுவிட்டது. அதனால் அவரால மீதமுள்ள போட்டிகளிலும், ஐபிஎல் 2021 போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால் ரிஷாப் பண்ட் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஆனார்.
ஆனால் இப்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் முழுமையாக குணம் ஆகிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதனால் நிச்சியமாகா மீதமுள்ள போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற தினம் வாய்ப்புள்ளது. அதிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்க அதிகம் வாய்ப்புள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இதுவரை இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அணிகளுள் ஒன்று தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் மிகவும் மோசமான தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது என்பதே உண்மை. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா அணி.
ஆனால் ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதே உண்மை. அவர் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் வெறும் 92 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இதற்கு முன்னாள் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தான் கொல்கத்தா அணியை வழிநடத்தி வந்தார்.
அதுவும் சில தோல்விகள் இருந்தாலும், இந்த ஆண்டு போல தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப் இல்லை என்பதே உண்மை. அதனால் ஈயின் மோர்கனுக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஆன தினேஷ் கார்த்திக் அணியை வழிநடத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் :
வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் வெறும் ஒரே போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. எவ்வளவோ முயற்சி செய்தாலும் சன்ரைசர்ஸ் அணிக்கு மிஞ்சியது தோல்வியே. அதனால் உடனடியாக கேப்டனை மாற்ற முடிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி.
இப்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டனாக நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கென் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். இருந்தாலும் ஒரு தோல்வியை பெற்றுள்ளார் வில்லியம்சன். அதனால் மீதமுள்ள போட்டிகளில் எப்படி அணியை வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.