இன்றைய போட்டியில் வெற்றிக்கு இது மிகவும் முக்கியம் ; ரோஹிட் சர்மா ஓபன் டாக்…..!!

மேட்ச் 1 ; இன்று இரவு 7:30 மணியளவில் ஐபிஎல் 2021கான முதல் போட்டி தொடங்க உள்ளது. அதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. அதனால் இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். அதில் அதிபட்சமாக 17 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 10 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வென்றுள்ளது. அதனால் நிச்சியமாக இன்றைய போட்டியில் விறுவிறுப்பான நிகழ்வுக்கு பஞ்சம் இருக்காது.

நேற்று ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ; கொரோனா பாதிப்பால் மக்கள் யாரும் அவர்கள் விரும்பும் வேலையை செய்ய முடியமால் இருக்கின்றனர். ஆனால் என்னால் எனக்கு பிடித்த வேலையை செய்ய முடிகிறது. அதனால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் அனைத்தும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நடைபெற்று வருகிறது.

ஹோட்டல் விட்டால் மைதானம் , மைதானம் விட்டால் ஹோட்டல் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிச்சயமாக மன அழுத்தம் வீரர்களுக்கு கண்டிப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஐபிஎல் 2021போட்டி ஏப்ரல் 9 ஆம் முதல் மே 30 வரை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட இரு மாதங்கள் நடைபெற உள்ளது. அதனால் நாங்கள் இந்த வட்டத்துக்குள் இருந்து கொண்டே எங்களது 100% சதவீதம் நாங்கள் ஐபிஎலுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா..!!