இந்திய அணியின் மூன்று முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் இவங்க தான் ; இந்திய அணியை அசைக்கவே முடியாது ; பயிற்சியாளர் ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வவ்போது இளம் வீர்ரகளுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது பிசிசிஐ. அதிலும் குறிப்பாக ஐபிஎல் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வீரர்களுக்கு வாய்ப்புகளை குவித்துள்ளது பிசிசிஐ. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 12 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி உள்ளனர்.

அதனை தொடர்ந்து இன்னும் சில வீரர்களை புதிதாக அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். இன்னும் இரு மாதங்கள் தான் உள்ளது ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இருப்பினும், 15 பேர் கொண்ட இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதர் சில முக்கியமான தகவலை கூறியுள்ளார். அதில் இந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 2022 போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா, முகமத் ஷமி, புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய ஸ்ரீதர் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து இந்திய அணியில் பல பிரச்சனை உள்ளது ஆட்களை தேர்வு செய்வதில். எனக்கு தெரிந்து இந்திய அணியின் மூன்று முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா தான். “

“இவங்க இருந்தாலே இந்திய அணிக்கு போதுமான ஒன்று. ஏனென்றால் டெத் ஓவரில் பவுலிங் செய்ய புவனேஸ்வர் குமார் இருக்கிறார், புதிய பாலில் சிறப்பாக பவுலிங் செய்ய பும்ரா மற்றும் ஷமி உள்ளனர். அதிலும் ஷமி முதல் ஓவர் பவுலிங் செய்தால், நிச்சியமாக எதிர் அணியில் இருக்கும் தொடக்க வீரர்களுக்கு அது ஆபத்தாக தான் இருக்கும்.”

“அதுமட்டுமின்றி இப்பொழுது ஹர்டிக் பாண்டியாவும் பவுலிங் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஜடேஜாவும் உள்ளதால் 5 மற்றும் 6வது பற்றிய கவலையும் தேவையில்லை. உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் பெரிய வீரர்கள் விளையாடுவது தான் சிறப்பாக இருக்கும். அதனால் இந்த மூன்று அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றால் தான் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஸ்ரீதர்.”

ஆனால் ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு முகமத் ஷமி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தான் அதிகமாக விளையாடி வருகிறார். அதனால் தீடிரென்று உலகக்கோப்பை டி-20 போட்டியில் விளையாடுவது சிரமம் தான். இந்திய அணிக்கு தேவையான மூன்று வேகப்பந்து வீச்சாளர் யாராக இருக்க முடியும் ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here