இவங்க மூன்று பேர் அணியில் உள்ளனர் ; அதனால் எந்த பயமும் தேவை இல்லை ; ஷிகர் தவான் ஓபன் டாக் ;

0

இன்று இரவு 7 : 00 மணியளவில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதனால் இப்பொழுது இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் மற்றும் சுமன் கில் ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதனை தொடர்ந்து இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் தான் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வியை பெற்றுள்ளனர். அதனால் தொடர்ந்து தோல்வியை மட்டுமே பெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் , இந்திய கிரிக்கெட் அணியை வெல்லுமா ?

அதுமட்டுமின்றி, இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரரான ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா, போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ.

போட்டி தொடங்கும் முன்பு இந்திய அணியின் கேப்டன் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” நாங்களும் இரண்டாவதாக தான் பேட்டிங் செய்ய நினைத்தோம். ஏனென்றால், இங்கு மழை வருவது போல இருப்பதால் இரண்டாவது பேட்டிங் தான் சரியாக இருக்கும். இருப்பினும் நான் எப்பொழுதும் அமைதியாக இருக்க மட்டுமே நினைப்பேன்.”

“நாங்க எப்பொழுது அணியின் கேப்டனாக சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க ஆசைப்படுவேன். எங்கள் அணியை பொறுத்தவரை எங்களுது நோக்கம் எப்பொழுதும் சரியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எண்ணம். அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் வீரர்களை தேர்வு செய்வது அவ்வளவு சுலபம் இல்லை.”

“ஏனென்றால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பல இளம் வீரர்கள் பட்டைய கிளப்பி விளையாடி வருகின்றனர். இளம் வீரர்களுது விளையாட்டு திறனை வெளிப்படுத்த பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. எங்கள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்ற சிறப்பாக வீரர்கள் உள்ளனர். என்னையும் சேர்த்தி தான் சொல்கிறேன். இந்திய அணியை ஆதரவிக்க இங்கு பல ரசிகர்கள் வந்துள்ளனர் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here