வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் :
கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் ஆரம்பித்த மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதுவரை நடந்த இரு போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.


இரண்டாவது ஒருநாள் போட்டியின் விவரம் :
டாஸ்:
முதல் போட்டியை போலவே டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்வதற்கு பதிலாக இந்த முறை பேட்டிங் செய்ய போவதாக முடிவு செய்தனர். அதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் :
தொடக்க வீரரான ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடிய சதம் அடித்துள்ளார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், ஒருவர் பின் ஒருவராக அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 311 ரன்களை குவித்தனர். அதில் ஷாய் ஹோப் 115, பிராண்டன் கிங் 0, நிக்கோலஸ் பூரான் 74, மாயேர்ஸ் 39, ப்ரூக்ஸ் 35 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளார்.


இந்திய அணியின் பேட்டிங் :
பின்பு 312 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரரான ஷிகர் தவான் இந்தமுறை எதிர்பாராத விதமாக 13 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.அதன்பின்னர் பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவும் பெரிய அளவில் பேட்டிங் செய்யாமல் விரைவாக ஆட்டம் இழந்தார்.
அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு தோல்வி தான் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் ஆல் – ரவுண்டரான அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களால் இந்திய அணி இறுதிவரை போராடிய 312 ரன்களை அடித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தவான் பேட்டி ;
த்ரில் வெற்றியை கைப்பற்றிய இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய தவான் கூறுகையில் ; ” நிச்சியமாக இந்த வெற்றிக்கு எங்களது அணியின் முயற்சி தான் முக்கியமான காரணம். எங்கள் (இந்திய) வீரர்கள் ஒருபோதும் அவர்களது நம்பிக்கையை இழக்காமல் சிறப்பாக விளையாடி வந்தனர்.”
“அதிலும் ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், சஞ்சு சாம்சன் போன்ற மூன்று வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். பவுலர் அவேஷ் கானும் சிறப்பாக பேட்டிங் செய்து 11 ரன்களை அடித்தார், அதுவும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக தான் மாறியுள்ளது.”


“ஐபிஎல் போட்டிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், ஏனென்றால் அனைத்து வீரர்களும் அங்கு சிறப்பாக விளையாடியுள்ளனர். எனக்கு தெரிந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர், அதுமட்டுமின்றி அவர்களுக்கு தொடக்க ஆட்டம் மிகவும் ஆற்புதமாக அமைந்தது. ஷை ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர்.”
“அப்பொழுதுதான் ஒன்று நினைத்தேன், அவர்கள் இப்படி விளையாடும் போது, எங்களாலும் விளையாட முடியும் என்று நான் நினைத்தேன். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் மிகப்பெரிய பார்ட்னெர்ஷிப் செய்தனர். சாஞ்சுக்கு சாம்சன் ரன் -அவுட் மிகப்பெரிய இழப்பாக இருந்தது, இருந்தாலும் விளையாட்டில் இப்படியெல்லாம் நடப்பது வழக்கம் தான் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”