இந்திய அணியின் ” பி ” பிரிவில் இருந்து ” ஏ ” பிரிவுக்கு போகவுள்ள மூன்று வீரர் பட்டியல் வெளியானது ; இது நம்ம List – லையே இல்லையே !!

0

இந்திய கிரிக்கெட் அணிகள் இப்பொழுது இரு அணிகளாக பிரிந்துள்ளது. அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் இந்திய அணியில் “ “பிரிவிலும், ஷிகர் தவான், பிருத்வி ஷாவ் போன்ற வீரர்கள் இந்திய அணியின் ” பி ” பிரிவில் உள்ளனர்.

கடந்த மாதம் இந்திய அணியின் ” ஏ ” பிரிவு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடிய பிறகு இப்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதனால் இந்திய அணியின் ” ஏ ” பிரிவை சேர்ந்த வீரர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

இதற்கிடையே இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணியின் ” பி ” பிரிவை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதில் மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளதால் தொடரை கைப்பற்றியது.

பின்னர் இப்பொழுது ஒரு டி-20 போட்டி முடிந்துள்ளது அதி; இந்திய அணி வெற்றிபெற்றதால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்பொழுது இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுமன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்து விலக உள்ளனர்.

அதனால் வீரர்கள் இல்லாமல் இருக்கும் இந்தியா அணியின் ” ஏ ” பிரிவுக்கு ஆட்கள் பற்ற குறையாக உள்ளது. அதனால் இந்திய அணியின் ” பி ” பிரிவில் இருந்து மூன்று வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதன் முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

யார் யார் அந்த மூன்று வீரர்கள் ?

இந்திய அணியின் “பி ” பிரிவில் உள்ள ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷாவ் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகிய இருவரும் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கு பிறகு இங்கிலாந்து நாட்டுக்கு போக உள்ளனர். அதுமட்டுமின்றி, ஜெயந்த் வீரரும் சில தனிமைப்படுத்தும் விதிகளை பின்பற்றி பிறகு அவரும் இங்கிலாந்து நாட்டுக்கு போக உள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டி, வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் போட்டிக்கு பிறகு இப்பொழுதுதான் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெறுமா இல்லையா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here