Batting-ல இந்த 2 பேரு தான் மாஸ், ஒரு துளி பயம் கூட இல்லாமல்…பேட்டிங் செய்வதில் ; கங்குலி பேட்டி

Batting-ல இந்த 2 பேரு தான் மாஸ், ஒரு துளி பயம் கூட இல்லாமல்…பேட்டிங் செய்வதில் ; கங்குலி பேட்டி

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் 2021 சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இதற்கிடையே முன்னாள் வீரர்கள் ஐபிஎல் அணிகளை பற்றியும், வீரர்களை பற்றி அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

அதன்வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய வீரரை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார் ; இந்திய அணியில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இருந்து வெளியேறினாலும், ஹார்டிக் பாண்டிய மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் எந்தவிதமான பயமும் இல்லாமல் அணியை வெற்றிக்கு கொண்டு செல்லும் திறமை உள்ளது.

இருந்த இருவரின் (ரிஷாப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டிய) பயம் இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் அனைத்து தகுதியும் இவர்களுக்கு இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறியுள்ளார் சௌரவ் கங்குலி.

அதுமட்டுமின்றி ரிஷாப் பண்ட் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஏனென்றால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தோள்பட்டையில் பலமான அடிபட்டதால்..! ஐபிஎல் 2021 தொடரில் விளையாட முடியமால் போய்விட்டது.

அதேபோல ஹார்டிக் பாண்டிய மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்தவர். அதுமட்டுமின்றி மும்பை இதனைசன் அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டர். இதுவரது முக்கியமான பங்களிப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேவையான ஒன்று.