நேற்று மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற 25வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.


அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்து கொண்டே வந்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 175 ரன்களை அடித்துள்ளது கொல்கத்தா.
அதில் வெங்கடேஷ் ஐயர் 6, பின்ச் 7, ஸ்ரேயாஸ் ஐயர் 28, நரேன் 6, நிதிஷ் ரானா 54, ஜாக்சன் 7, ரசல் 49 போன்ற ரன்களை அடித்துள்ளனர். பின்பு 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. அதில் அருமையாக பார்ட்னெர்ஷிப் அமைந்த காரணத்தால் 17.5 ஓவர் முடிவில் 176 ரன்களை அடித்தது.


அதனால் 7 விக்கெட்டை வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வென்றுள்ளது. அதேபோல 6 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி மூன்று போட்டியில் வென்றுள்ளது.
போட்டி முடிந்த பிறகு பேசிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டன் அளித்த பேட்டியில் ; “இது எங்கள் அணிக்கு கிடைத்து ஒரு முன்னேற்றம் தான். அதுமட்டுமின்றி, எதிர் அணியின் (கொல்கத்தா) விக்கெட்டை விரைவாக கைப்பற்றியதில் தான் எங்களால் போட்டியில் வெற்றி பெற முடிந்தது.”


“அதுமட்டுமின்றி, எங்கள் வீரர்களின் டெத் ஓவர் மிகவும் அருமையாக உள்ளது. அதில் புவனேஸ்வர் குமார் போலவே மார்கோ பவுன்சர் பந்துகளை வீசி எதிர் அணியை திணறவைத்துள்ளார். பேட்டிங் பொறுத்தவரை ராகுல் மற்றும் மார்க்ரம் உள்ளனர். அதனால் இனிவரும் வரும் போட்டிகளில் கவலை இல்லை.”
உமர் மாலிக் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்து வருகிறார். அவருக்கு சரியான பீல்டிங் செட் செய்வதுதான் கடினமாக உள்ளது. எங்கள் அணியிலும் சில தவறுகள் உள்ளன. அதனை நிச்சியமாக சரி செய்வோம் என்று கூறியுள்ளார் கேன் வில்லியம்சன்.