வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை பற்றி இங்கிலாந்து அணியின் வீரர் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
வருகின்ற ஐபிஎல் 2021, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த ஆண்டு 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி இதுவரை 13 ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து முடினித்துள்ளது.
இப்பொழுது 14வது ஆண்டு ஐபிஎல் இன்னும் ஆரம்பிக்க இரண்டு நாட்களே உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டியை ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இண்டிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இங்கிலாந்து அணியின் வீரர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்தவர் ஜோஸ் பட்லர். அவரிடையே சமீபத்தில் நடந்த பேட்டியில் யார் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியான வீரர் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பட்லர் ;
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியான வீரர் என்றால் அது வெஸ்ட் இண்டிங்ஸ் அணியை சேர்ந்த கிரிஷ் கெய்ல் மற்றும் ஆன்ட்ரே ரசல் தான். இந்த இருவரும் ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஸ்ட்ரைக் ரெட் வைத்துள்ளனர். அதில் கிரிஷ் கெய்ல் 150+ மற்றும் ஆன்ட்ரே ரசல் 180+ இவர்களது அதிரடியான ஆட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சியமாக விறுவிறுப்பான போட்டியாக தான் நிச்சியம் இருக்கும்.
இந்த இருவரும் அவரது அதிரடியான ஆட்டத்தால் நீண்ட காலமாக.. சரியான முறையில் அதிரடியாக விளையாடி வருகின்றனர் என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.