டி-20 உலகக்கோப்பை போட்டியில் இவர்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தால் மாஸ் ஆக இருக்கும் : முன்னாள் இந்திய வீரர் கருது…!!

ஐபிஎல் 2021 முடிந்த பிறகு, உலகக்கோப்பைக்கான பயிற்சி தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. டி-20 உலகக்கோப்பை 2021 அக்டோபர் மாதத்தில் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் இந்திய அணி அதிக ரன்களை எடுக்க முடிந்தது.

அதனால் வருகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் இவர்கள் இருவரும் (விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா) ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தால் நிச்சியமாக இந்திய அணியால் அதிக ரன்களை எடுக்க முடியும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் கருத்தை கூறியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சரண்தீப் சிங் ; ரோஹித் சர்மா மற்றும் தவான் டி-20 உலகக்கோப்பையில் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்தால் நிச்சியமாக சிறப்பான அணியாக இருக்கும். விராட் கோலியை விட தவான் சிறந்த பேட்ஸ்மேன் தான் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த ஐபிஎல் போட்டியிலும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாகத்தான் விளையாடியுள்ளார். அவர் (தவான்) விளையாடும் அனைத்து போட்டியிலும் அதிக ரன்களை எடுத்துள்ளார்.

ஏதோ ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று சொல்லிவிட முடியாது. இந்திய அணியில் இணைவது அவளோ சுலபம் இல்லை. அதனால் வருகின்ற ஐபிஎல் 2021 போட்டியில் உலகக்கோப்பைக்கான ஆட்கள் எடுக்கும் வேலை நிச்சியமாக நடைபெறும்.

Also Read: எங்கள் அணியின் தோனி இவர் தான் ; இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கருத்து.

வருகின்ற ஐபிஎல் 2021 போட்டியில் யார் சரியாக பயன்படுத்தி விளையாடிகிறாரோ.அவர்களுக்கே வாய்ப்பு இருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரர் சரண்தீப் சிங். சஹால் மற்றும் குலதீப் யாதவின் சூழல் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருக்க போகிறது.

இந்திய அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டர் ஜடேஜா அடிபட்ட காரணத்தால் சில போட்டிகளில் அவரால் விளையாட முடியமால் போய்விட்டது. அவரும் அணி இருந்தால் இந்த மூவரின் பந்து வீச்சும் அசத்தலான இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.