விராட்கோலி மற்றும் தோனி போடும் ஸ்கெட்ச் ; இந்திய அணியில் ஏற்பட போகும் இரண்டு மாற்றங்கள் இதுதான் ; முழு விவரம் இதோ ;

0

ICC t20 Worldcup 2021: ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டிலும் சிறப்பாக டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, இரு தினங்களுக்கு முன்பு தான் சூப்பர் 12 நாடுகளுக்கு இடையேயான போட்டிகள் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது இந்திய. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்தனர்.

பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. அதில் இந்திய அணியின் பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. அதனால் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. 17.5 ஓவர் முடிவில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்.

கேப்டன் விராட்கோலி மற்றும் ஆலோசகர் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் இணைந்து அணியில் இருக்கும் தவறுகளை திருத்த முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று இரு வீரர்களை அடுத்த போட்டியில் மாற்ற வேண்டும்…!

அதில் முதல் வீரராக ஹார்டிக் பாண்டிய உள்ளார். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 பந்தில் 11 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் இவருக்கு தோள்பட்டையில் பலமாக அடிபட்டுவிட்டது.

இப்பொழுதெல்லாம் ஹார்டிக் பாண்டியாவால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை என்பது தான் உண்மை. அதனால் இவருக்கு பதிலாக இளம் வீரரான இஷான் கிஷான் இடம்பெற்றால் சிறப்பாக பேட்டிங் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் ஐபிஎல் 2021 இருந்து லீக் போட்டியில் விளையாடிய இஷான் கிஷான் 80க்கு மேற்பட்ட ரன்களை அதிரடியாக அடித்துள்ளார்.

இன்னொரு வீரர், பவுலர் புவனேஸ்வர் குமார்; சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2021 போட்டிகளிலும் சரியாகவே பவுலிங் செய்யாத வீரர் என்றால் அது புவனேஸ்வர் குமார் தான். அதனால் இவருக்கு பதிலாக ஷர்டுல் தாகூர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் கடத்த சில போட்டிகளில் ஷர்டுல் தாகூர் பவுலிங் சிறப்பாக மாறிக்கொண்டே இருக்கின்றனர். அவரால் நிச்சயமாக விக்கெட்டை கைப்பற்ற முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷர்டுல் தாகூர் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அடுத்த போட்டி வருகின்ற 31ஆம் தேதி அன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது இந்திய அணி. அதில் இந்த இரு மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. நிச்சியமாக அடுத்த போட்டியில் தோனியின் ஆலோசனை நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.

ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்குறீங்க ?? மறக்காமல் உங்கள் கருத்தை COMMENTS பண்ணுங்க…!!!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here