அடுத்த போட்டியில் வாய்ப்பை இழக்க போகும் முக்கியமான இந்திய வீரர் ; ரோஹித் சர்மா திட்டவட்டம் ;

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசிய கோப்பை 2022 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது..!

இந்திய மற்றும் பாகிஸ்தான் :

நேற்று முன்தினம் நடைபெற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 147 ரன்களை அடித்தனர்.

பின்பு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 148 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய. அதனால் குரூப் ‘பி’ பிரிவில் முதல் இடத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களின் சொதப்பல் ஆட்டம்:

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினு நிச்சியமாக ஒரு சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முதல் போட்டியில் அனைவரும் எதிர்பார்த்த படி கே.எல்.ராகுல் பேசிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை.

அவர் (கே.எல்.ராகுல்) விளையாடிய முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். எப்பொழுது தொடக்க வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தால் நிச்சியமாக எந்த அணியாக இருந்தாலும் ரன்களை அடிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கே.எல்.ராகுல் இப்பொழுது தான் காயத்தில் இருந்து வெளியேறிய பிறகு ஜிம்பாபே தொடரில் விளையாடினார்.

அதிலும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இரு போட்டிகளில் 1, 30 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ப்ளஸ் தான். அதுமட்டுமின்றி பவுலிங்-கில் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பவுலிங் செய்யவில்லை என்பது தான் உண்மை.

4 ஓவர் பவுலிங் செய்த யுஸ்வேந்திர சஹால் 32 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. அதனால் யுஸ்வேந்திர சஹாலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஆசிய மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் வெல்ல வேண்டுமென்று இந்திய அணி அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது இந்திய. அதனால் நிச்சியமாக இந்த மாற்றங்களை ரோஹித் சர்மா செய்ய அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here