சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அணியின் முன்னாள் வீரரான கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி வந்துள்ளார். அதேபோல சில முக்கியமான நிகழ்வை பற்றி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் முக்கியமான கருத்தை கூறியுள்ளனர்.
கடந்த 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது பார்ட்னெர்ஷில் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் இணைந்து 318 ரன்களை விளாசியுள்ளனர். அந்த போட்டியை வெற்றிபெற உதவியாக இருந்துள்ளது.
டி-20 போட்டிகள் போல, அன்று ராகுல் டிராவிட் மற்றும் கங்குலி ஆகிய இருவரும் சிக்ஸர் மற்றும் பவுண்டர் ஆக அடித்து தொம்சம் செய்தனர். அப்பொழுது நான் இங்கிலாந்து அணியில் இருதேன். இவர்களுது ஆட்டத்தை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
1999 உலகக்கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டி தான் நான் முதல் முதலில் இந்திய ரசிகர்களை மைதானத்தில் பார்த்தது. அவர்களது ஆட்டம் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஜோஸ் பட்லர் இப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 14வது போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 64 பந்தில் 124 ரன்களை விளாசியுள்ளார்.
இங்கிலாந்து அணியில் இப்பொழுது இருக்கும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் தான் ஜோஸ் பட்லர். அதேபோல, வருகின்ற இந்திய தாய்க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.