HomeTour Seriesஇந்திய கிரிக்கெட் அணியின் மானத்தை காப்பாற்றிய இரு வீரர்கள் ; பட்டைய கிளப்பிட்டாங்க பா..!

இந்திய கிரிக்கெட் அணியின் மானத்தை காப்பாற்றிய இரு வீரர்கள் ; பட்டைய கிளப்பிட்டாங்க பா..!

இந்திய மற்றும் இங்கிலாந்து : ஐந்தாவது டெஸ்ட் போட்டி:

நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் (சுமன் கில் மற்றும் புஜாரா) ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை சிறப்பாக விளையாடவில்லை. தொடக்கத்திலேயே இரு விக்கெட்டை இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.

பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, விராட்கோலி போன்ற விக்கெட்டை தொடர்ந்து கைப்பற்றியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறியது. ஆமாம், தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த இந்திய அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் போனது.

ஜடேஜா மற்றும் ரிஷாப் பண்ட் :

105 ரன்கள் அடித்த நிலையில் 5 விக்கெட்டை இழந்தது இந்திய கிரிக்கெட் அணி. அதிகபட்சம் 200 ரன்களை கூட இந்திய கிரிக்கெட் அடிக்காது என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் தான் ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

ஆமாம், ரிஷாப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களை அடித்து ஆட்டம் இழந்தார். பின்னர் ரவீந்திர ஜடேஜா 163 பந்தில் 83 ரன்களை அடித்து இன்னும் ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகிறார். முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 338 ரன்களை அடித்துள்ளனர்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சுமன் கில் , புஜாரா போன்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காத காரணத்தால் இந்திய அணிக்கு ஆபத்தாக மாறியுள்ளது தான் உண்மை. இன்று மதியம் தொடக்க உள்ள இரண்டாவது நாள் போட்டியிலும் ஜடேஜாவின் அதிரடியான ஆட்டம் தொடருமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img