சமீபத்தில் தான் ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுவரை 4 முறை சிஎஸ்கே அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2021ல் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ஆனால் எதிர்பாராத விதமாக Eliminator போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்து ஐபிஎல் 2021 போட்டிகளில் இருந்து வெளியேறியது.
சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் அளித்த பேட்டியில் ; நான் கண்டிப்பாக விராட்கோலி மற்றும் டி-வில்லியர்ஸ் ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த ஆண்டு தான் நான் புதிதாக பெங்களூர் அணியில் இடம்பெற்றேன்.
அதில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதுமட்டுமின்றி, விராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரால் நான் உயர்ந்தது போல உணர்கிறேன். ஏனென்றால் அவர்கள் இருவரும் எனக்கு அந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதிலும் நானும் அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக தான் பேட்டிங் செய்வோம்.
அவர்களுடன் விளையாடும் போது மிகப்பெரிய நம்பிக்கை எழுந்தது. அதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது என்று கூறியுள்ளார் மேக்ஸ்வெல். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் 14 போட்டியில் விளையாடி 513 ரன்களை அடித்துள்ளார்.
விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதே கிடையாது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டுடன் விராட்கோலி இந்திய அணியின் டி-20 போட்டிக்கும், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கும் கேப்டனாக இருக்க போவதில்லை என்று அவரே உறுதியாக சொல்லிவிட்டார்.
அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது…! இப்பொழுது விராட்கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் அவரவர் கிரிக்கெட் அணியில் இணைந்து உலகக்கோப்பை போட்டிக்காக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முறை எந்த அணி ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2021 என்ற பட்டத்தை வெல்ல போகிறது என்பதை comments பண்ணுங்க……!!!!