இவங்க இரண்டு பேர் என்னை ரொம்ப நம்புறாங்க…! அதனால் தான் அதிரடியாக விளையாட முடிந்தது ; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட டி-20 தொடர் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய.

தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினார். ஆனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பல் ஆட்டத்தை தான் விளையாடினார்கள். அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த இந்திய அணிகளை அடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் இறுதியாக களமிறங்கிய தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை அடித்தது இந்திய அணி. அதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 64, சூர்யகுமார் யாதவ் 24, ரிஷாப் பண்ட் 14, தினேஷ் கார்த்திக் 41, ரவிச்சந்திரன் அஸ்வின் 13 ரன்களை அடித்துள்ளனர்.

இதையும் படியுங்க ; இவர் மட்டுமில்லை என்றால் 150 கூட அடித்திருக்க முடியாது ; ரோஹித் சர்மா பேட்டி ;

பின்பு 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. ஆமாம், தொடக்கத்தில் இருந்து சரியாக பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 122 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் தினேஷ் கார்த்திக் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் 150 ரன்களை அடிக்குமா என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் அதிரடியாக விளையாடி 41 ரன்களை விளாசியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் பெங்களூர் அணியின் சிறந்த பினிஷராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டிக்கான டி-20 அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ் தினேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; “முதல் டி-20 போட்டியில் ரன்களை அடிக்க கடினமாக தான் இருந்தது. அந்த இடங்களில் பேட்டிங் செய்வது சுலபம் இல்லை. நான் பேட்டிங் செய்து வருகின்ற இடம் (7வதாக) சுவாரஷியமாக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, என்னை எப்பொழுதும் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் ஆதரித்து கொண்டே தான் இருக்கின்றனர். அதனால் தான் என்னால் அதிரடியாக விளையாட முடிந்தது என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here