இந்த இருவர் இந்திய அணியில் இல்லாதது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது ; இந்திய முன்னாள் வீரர் ; இந்திய அணியின் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உச்சகத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இதில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை ஒரு சில போட்டிகளில் அசத்தலாக திறமையை வெளிப்படுத்திய வீரருக்கு சில போட்டிகள் சொதப்பல் நிச்சியமாக ஏற்படும். எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் எல்ல போட்டிகளிலும் 100 ரன்களை அடிக்க முடியாது.

அதேபோல தான் பவுலர்களும், சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே இல்லை. வெறும் ஒரு போட்டியின் விளையாட்டை வைத்து நிறைய வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.அதில் இப்பொழுது சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதனை பற்றி பேசிய முன்னாள் இந்திய வீரரான சிவராமகிருஷ்ணன் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதனை பற்றி பேசிய அவர் ; குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆட்டம் வீழ்ச்சியில் போகிறது. அதனை பார்க்கும்போது தான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஒருகாலத்தில் (தோனி இருக்கும்போது) இவர்கள் தான் மிகவும் முக்கியமான இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்கள், அனால் இப்பொழுதெல்லாம் அவர்களை போட்டியில் காணவே முடிவதில்லை. நிறைய போட்டிகளில் இவர் இருவரையும் அணியில் எடுப்பதே இல்லை.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டி-20யில் விளையாடிய சாஹல் 3 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதன்பின்னர் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை. அதேபோல தான் குல்தீப் யாதவ், இரண்டு ஒருநாள் போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற குல்தீப் எந்த ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

இதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த இருவரும் அவர்களுது கிரிக்கெட் தொடக்க காலத்தில் சிறப்பான முறையில் விளையாடி வெற்றியாக இருந்தனர். அப்பொழுதெல்லாம் பேட்ஸ்மேன் இவர்களுது குறையை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இப்பொழுது அதனை கண்டுபிடித்துள்ளனர் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன்.