இந்த இருவருக்கு டி -20 உலககோப்பையில் கலந்து கொள்ள தகுதி உள்ளது ;; வி.வி.எஸ். லட்சுமன் கருத்து… யார் அந்த இருவர் தெரியுமா??

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் டி-20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆன இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் அவரவர் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டவது டி-20 போட்டியில் அறிமுகம் ஆன இஷான் கிஷான் 32 பந்தில் 56 ரன்களை விளாசியுள்ளார்.

4வது போட்டியில் இஷான் கிஷானுக்கு பதிலாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 31 பந்தில் 57 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸர் அடித்துள்ளார். அதனால் வாய்ப்பு பெற்ற இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டியில் இந்த இருவரும் மும்பை இண்டியன்ஸ் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷன் 13 போட்டிகளில் விளையாடி 516ரன்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 99 ரன்கள் அடித்துள்ளார். சூரியகுமார் யாதவ் 15 போட்டிகளில் விளையாடி 480 ரன்களை எடுத்துள்ளார், அதில் அதிகபட்சமாக 79 ரன்களை எடுத்துள்ளார்.

ட்ரெட்னிங் செய்தி : சிஎஸ்கே அணியில் ஒரு வீரர் வெளியேறினார் …! யார் அது தெறியுமா? முழு விவரம்…..!

சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.லட்சுமண் அளித்த பேட்டியில் ; அக்டோபர் மாதத்தில் நடக்கபோகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் விளையாட தகுதி வாய்ந்தவர்கள். ஏனென்றால் இந்திய அணியில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே இருவரும் அரைசதம் அடித்து அணியின் வெற்றி வழிவகுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இவர்களின் அதிரடியான விளையாட்டை ஐபிஎல் போட்டிகளில் பல முறை பார்த்திருக்கிறோம். அதனால் இந்த இருவரும் டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற இந்த இருவருக்கும் நிச்சியமாக தகுதி இருக்கிறது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.லட்சுமண்.

இருந்தாலும் வருகின்ற ஐபிஎல் 2021 போட்டிகளில் வைத்து டி-20 போட்டிக்கான அணியை தீர்மானம் செய்ய முடியும் என்று இந்திய அணியில் முன்னாள் பவுலர் கூறியுள்ளார். அவர் சொன்னது போல, ஐபிஎல் 2021 போட்டியில் யாருடைய ஆட்டம் அசத்தலாக இருக்கிறதோ அவர்களே இந்திய அணியில் என்று தகவல்கள் வெளியானது.