இந்த இருவருக்கும் உலகக்கோப்பைகான இந்திய அணியில் நிச்சியமாக இடம் இருக்கும்…! சந்தேகமே இல்லை..!

மேட்ச் 4: நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த நிலையில் 221 ரன்களை எடுத்தனர்.

பின்பு 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிவரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான். இதனால் புள்ளிபட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6-வது இடத்திலும் உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முதல் போட்டியை தவற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அனைத்து அணைகளும் 180+ ரன்களை எடுத்துள்ளனர்.

அதிலும் நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி வேற லெவல் என்றுதான் சொல்ல முடியும். ஏனென்றால் 200+ ரன்களை இரு அணிகளும் சரமாரியாக அடித்துள்ளனர்.

அதிலும் முக்கியமான இருவர் தான் அதற்கு காரணம் என்று சொல்ல வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். அவர் இந்திய அணியின் மிக சிறந்த பிளேயர். அதில் ஏமாற்றமும் இல்லை.

ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகளில் அவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 4போட்டிகளில் சேர்த்தி வெறும் 15 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதனால் அவரை சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தனர்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐபிஎல் 2021யின் முதல் போட்டியிலேயே 91 ரன்களை அடித்துள்ளார். அதனபின்னர் அதிகபட்சமாக தீபக் 64 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை விளையாடி ஐபிஎல் 2021கான முதல் சதம் அடித்துள்ளார்.

அதனால் கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆட்டம் இப்படியே தொடரினால் நிச்சியமாக இந்திய அணியில் வாய்ப்பு மட்டுமின்றி , அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ட-20 உலகக்கோப்பைக்கான போட்டியிலும் விளையாட வாய்ப்பு நிச்சியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.