அடப்போங்கப்பா…! இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் இவர்களுக்கு இடம் இல்லையா…!

அடப்போங்கப்பா…! இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் இவர்களுக்கு இடம் இல்லையா…!

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி சிறப்பான முறையில் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.

ஐபிஎல் 2021 ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுகான ஐபிஎல் 2021 இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெறும். அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஐரு அணிகளில் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அடப்போங்கப்பா…! இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் இவர்களுக்கு இடம் இல்லையா…!

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. அப்பொழுது சிஎஸ்கே அணிக்கு பவுலிங் சாதகமாக இல்லாத காரணத்தால் 7 விக்கெட் வித்தியசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

அதனால் அணியில் ஏதாவது புதிய வீரருக்கு இடம் கொடுத்தால் சிஎஸ்கே அணிக்கு நல்ல பவுலிங் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்ற நேரத்தில், சிஎஸ்கே அணியில் நிகிடி மற்றும் சமீபத்தில் சிஎஸ்கே அணியில் இணைந்த ஜேசன் ஆகிய இருவரும் அடுத்த போட்டியில் இல்லை என்று சிஎஸ்கே அணி கூறியுள்ளது.

ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த சிஎஸ்கே நிர்வாகம் ; நிகிடி இன்னும் தனிமைப்படுத்த பட்டுள்ளார், அதுமட்டுமின்றி ஜேசன் இப்பொழுதுதான் அணியில் புதிதாக இணைந்துள்ளார். அதனால் இவர் விளையாட இன்னும் சிறிது நாட்கள் ஆகலாம் என்று கூறியுள்ளனர்.

ஒருவேளை ப்ராவோவுக்கு பதிலாக ஏதாவது புதிய பவுலர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றால் நிச்சியமாக நல்ல ஒரு வலுவான பவுலிங் சென்னை அணிக்கு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.