இவங்க இரண்டு பேர் இருந்த, இந்திய அணிக்கு எப்பையுமே வெற்றிதான் ; இந்திய அணியின் முன்னாள் வீரர் பிராக்யன் ஓஜா அதிரடி கருத்து..!

சமீபத்தில் ஐபிஎல் 2021, போட்டிகள் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்தது பிசிசிஐ. அதனால் ஐபிஎல் 2021 போட்டிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அனைத்து வீரர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற போகிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எதிர்கொள்ள போகிறது. வெற்றியை பெறுமா? இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் இந்திய வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க அகர்வால், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), விஹாரி, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது ஷாமி, முகம்மது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான பிராக்யன் ஓஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்திய அணியில் இந்த இருவர் இருந்தால் நிச்சியமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிச்சியமாக வெற்றிபெறும் என்று கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை பற்றி பேசிய பிராக்யன் ஓஜா ; ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகிய இருவரும் சூழல் பந்து வீச்சாளர்கள், இவர்கள் மட்டும் அணியில் இருந்தால் போது இந்திய அணிக்கு நிச்சியம் வெற்றிதான்.

இவர்கள் இருவரும் நல்ல பேட்டிங் செய்வார்கள், அதுமட்டுமின்றி சிறப்பான பந்து வீச்சாளரும் கூட. அதுமட்டுமின்றி ஜடேஜா சிறப்பான ஆல் -ரவுண்டர் என்று ஐபிஎல் 2021 நிரூபித்துள்ளார். அஸ்வின் சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் பிராக்யன் ஓஜா.