HomeTrending Newsஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு வாய்ப்பை இழக்க போகும் இரு முக்கியமான வீரர்கள் ; இதோட...

ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு வாய்ப்பை இழக்க போகும் இரு முக்கியமான வீரர்கள் ; இதோட அவ்வளவு தான் ;

ஆசிய கோப்பை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆசிய கோப்பை 2022 சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 லீக் சுற்றுகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.

இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை 2022 இறுதி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். ஏனென்றால், நேற்று நடந்த போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 173 ரன்களை அடித்தனர்.

பின்பு 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை கிரிக்கெட் அணி. இறுதி ஓவர் வரை சிறப்பாக விளையாடிய இலங்கை அணி தீரில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதனால் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை அணி.

இதற்கு மேல் இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். இதனை நிச்சியமாக மனதில் வைத்து கொண்டு தான் டி-20 உலகக்கோப்பை 2022 யில் விளையாட போகிறது இந்திய. அதுமட்டுமின்றி, இந்த முறை இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்பது தான் உண்மை.

அதிலும் ஆவேஷ் கான், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் பெரிய அளவில் விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றாலும் அதிகப்படியான ரன்களை கொடுத்துள்ளனர். ஆமாம்,, அர்ஷதீப் சிங் 4 போட்டிகளில் விளையாடிய 4 விக்கெட்டை எடுத்த நிலையில் 130 ரன்களை கொடுத்துள்ளார்.

அதேநேரத்தில் ஆவேஷ் கான் 2 போட்டிகளில் விளையாடிய வெறும் 2 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் 72 ரன்களை கொடுத்துள்ளார். இப்படி அதிகப்படியான ரன்களை கொடுத்தால் நிச்சியமாக அது சிறந்த பவுலருக்கான தகுதியாக இருக்க வாய்ப்பு இல்லை. இவர்களுக்கு உலகக்கோப்பை பேட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்குமா ?

அதற்கு நிச்சியமாக வாய்ப்பு குறைவு தான். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், தீபக் சஹார் போன்ற முன்னணி வீரர்கள் இன்னும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அனைவரும் காயம் காரணமாக ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதிலும் இப்பொழுது வெளியான தகவலின் படி ஆவேஷ கானுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவருக்கு பதிலாக தீபக் சஹார் அணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வேண்டும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img