இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடர் சசிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று டி-20 போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளனர்.
மூன்றாவது போட்டியின் விவரம் :
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. ஆனால் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்து கொண்டு இருந்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 164 ரன்களை அடித்தனர்.
அடிஹல் பிராண்டன் கிங் 20, மாயேர்ஸ் 73, நிக்கோலஸ் பூரான் 22, பவல் 23, ஹெட்மயேர் 20 ரன்களை அடித்தனர். பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. தொடக்க வீரரான ரோஹித் சர்மா சில ஓவரில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர் சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதிலும் சூர்யகுமாரின் அதிரடியான ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம். 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 165 ரன்களை அடித்தனர்.
அதில் சூரியகுமார் யாதவ் 76, ரோஹித் சர்மா 11, ஸ்ரேயாஸ் ஐயர் 24, ரிஷாப் பண்ட் 33, ஹர்டிக் பாண்டிய 4, தீபக் ஹூடா 10 ரன்களையும் அடித்துள்ளனர். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது இந்திய. என்னதான் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங்கில் மட்டும் இந்திய அணி சொதப்பி வருகிறது தான் உண்மை.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அடுத்த போட்டிக்கு சில தினங்கள் உள்ளது. அதற்குள் காயம் சரியாகிவிடும். நாங்க மிடில் ஆர்டரில் பவுலிங் செய்தது தான் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த நேரத்தில் முடிந்த வரை ரன்களை கொடுக்காமல் கட்டுப்படுத்திக்கொண்டு வந்தோம்.”
“அந்த சூழ்நிலையை நாங்கள் சரியாக பயன்படுத்திவிட்டோம் என்று தான் நான் நினைக்கிறன். வெளியே இருந்து பார்க்கும்போது அதிகமாக ரிஸ்க் எடுக்காது போலையும், மிடிலில் நிதானமாக விளையாடியது போல தான் தெரியும். அதிலும் சூரியகுமார் யாதவ் உண்மையிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.”
“அவர் (சூரியகுமார்) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று தான். 165 ரன்கள் அடிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஏனென்றால் இது பவுலர்களுக்கான பிட்ச், அதனால் சரியான ஷாட் அடிக்க சரியான பந்திற்கு காத்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”