HomeTrending Newsஇந்த இரு வீரர்களும் கேப்டன் பதவிக்கு கடினமாக விளையாடி வருகின்றனர் ; ரோஹிக்கு பிறகு இவர்...

இந்த இரு வீரர்களும் கேப்டன் பதவிக்கு கடினமாக விளையாடி வருகின்றனர் ; ரோஹிக்கு பிறகு இவர் தான் கேப்டன் ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கியமான காரணம் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன்கள் தான் முக்கியமான காரணம். ஆமாம், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்றது. பின்பு சோராவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி வலுவான இந்திய அணியாக மாறியது.

அதன்பின்னர் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி அனைத்து விதமான ஐசிசி கோப்பையும் வென்றனர். பின்பு விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்திய.

இப்பொழுது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக வழிநடத்தி கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி வருகின்ற ஆசிய கோப்பை மற்றும் டி-20 2022 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர்.

35வயதான ரோஹித் சர்மா இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் அடுத்த கேப்டனாக யாரை இருக்க முடியும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. தென்னப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரிஷாப் பண்ட் கேப்டனாகவும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாகவும், வெட்ஸ் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளனர்.

அதனால் அடுத்த கேப்டனை தேர்வு செய்வதில் நிச்சியமாக பிசிசிஐ-க்கு கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல் கூறுகையில் ; “ரிஷாப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி கொண்டு வருகின்றனர்.”

“அதுமட்டுமின்றி ஒரு கேப்டனாகவும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அவ்வப்போது கேப்டனாக வாய்ப்புகள் கிடைக்கும்போது அவர்களது கேப்டன் பதவியில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அதேபோல தான் ஹர்டிக் பாண்டியாவும். அதனால் எனக்கு தெரிந்து இந்த மூண்டு வீரர்களில் யாராவது ஒருவர் தான் ரோஹித் ஷர்மாவுக்கு நல்ல மாற்றமாக இருக்க போகின்றனர் என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.”

மேலும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பற்றி பேசிய அவர் ; “குஜராத் அணியில் நான் (பார்திவ் பட்டேல்) கேப்டனாக அணியை வழிநடத்தி கொண்டு இருக்கும்போது தான் அறிமுகம் ஆனார். அப்பொழுது அவரிடம் நான் விஷயங்களை பற்றி பேசியுள்ளேன். எப்பொழுதும் ஒரு பேட்ஸ்மேன் விக்கெட்டை எப்படி கைப்பற்ற வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.”

“இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தினர் பும்ரா. அதில் இந்தியா அணி தோல்வி பெற்றது. இருப்பினும் நிச்சியமாக இந்திய அணியின் கேப்டனாக வர கூடிய அனைத்து திறனும் பும்ராவிடம் உள்ளது என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img