MS தோனியால் வாய்ப்பை இழந்து தவிக்கும் இரு இந்திய வீரர்கள் ; இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் பேட்டி ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல பல வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு இல்லாமல் இழந்து வருகின்றனர். அந்த வரிசையில் தான் இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வந்தனர். அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்து வருகின்றனர்.

ஆனால் இப்பொழுது அணியில் வாய்ப்பே கிடைப்பது இல்லை. ஆமாம்… சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு முக்கியமான காரணத்தை பற்றியும் அதில் தோனியும் தான் காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரை பற்றி கூறுகையில் ; எனக்கு தெரிந்து குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகிய இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு மிகவும் கடினப்பட்டு வருகின்றனர். ஆமாம்..! ஏனென்றால் தோனி இவர்கள் இருவரையும் சிறப்பான முறையில் வழிநடத்தி வந்துள்ளார்.

ஏனென்றால் தோனி விக்கெட் கீப்பர் ஆக இருந்த காலத்தில் சுழல் பந்து வீச்சாளருடன் நன்கு பேசி, விக்கெட்டை கைப்பற்றி வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. அதுமட்டுமின்றி, தோனிக்கு நன்கு தெரியும் எப்படி சுழல் பந்து வீச்சாளர்களை வைத்து எப்படி விக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்று தெரியும். தோனிக்கு பிறகு அவர்கள் இருவரையும் நம்புவதும் இல்லை, வாய்ப்பும் கொடுப்பதில்லை என்பது தான் உண்மை.

இப்பொழுது வரை விராட்கோலி தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்துள்ளார். ஆனால் தோனியை தான் அவர்கள் இருவரும் அதிகமாக நம்பியுள்ளார்கள் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்.

நீண்ட நாட்கள் கழித்து இப்பொழுது நடைபெற்று முடிந்துள்ளது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் களமிறங்கினார் யுஸ்வேந்திர சஹால். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எந்தவித விக்கெட்டையும் கைப்பற்றவில்லை, ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் சஹால். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.

அதனால் அடுத்த போட்டிகளில் யுஸ்வேந்திர சஹாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ? இல்லையா? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here