Advertisement
HomeTrending Newsதென்னாபிரிக்கா அணியை வெல்ல இந்த இரண்டு விஷயங்கள் போதும் ; இந்திய அணிக்கு நிச்சியமாக வெற்றி...

தென்னாபிரிக்கா அணியை வெல்ல இந்த இரண்டு விஷயங்கள் போதும் ; இந்திய அணிக்கு நிச்சியமாக வெற்றி தான் ; பாரத் அருண் பேட்டி ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26ஆம் தேதி அன்று தென்னாபிரிக்காவில் உள்ள செண்டோரின் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானத்தில் இதுவரை தென்னாபிரிக்கா அணிக்கு தோல்வியே வந்தது இல்லையாம்.

அதிகபட்சமாக தென்னாபிரிக்கா அணி தான் வென்றுள்ளனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு நிச்சியமாக சவாலாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

அதில் ரோஹித் சர்மா துணை கேப்டனாக நியமனம் செய்தார்கள். ஆனால் திடிரென்று அவரது கையில் பலமாக அடிபட்டதால் அவரது டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியாது என்று தெரிகிறது.

அதனால் அவருக்கு பதிலாக பரியங்க் பஞ்சால் , துணை கேப்டனாக கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளரான பாரத் அருண் அளித்த பேட்டியில் ; இந்திய அணியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியை பற்றி அவர் கூறுகையில் ; நான் இப்பொழுதும் , எப்பொழுதும் இந்திய அணியின் பவுலிங்-ஐ- நம்புவேன். நான் எப்பொழுதும் பவுலர்களிடன் ஒன்று சொல்வது வழக்கம், எப்பொழும் விக்கெட்டை கைப்பற்ற மட்டுமே நினைக்க கூடாது. அப்படி யோசிப்பது முட்டாள் தனம்.

எதிர் அணியை இரண்டு விதமாக வீழ்த்த முடியும். அதில் முதல் ஒன்று அவர்களது விக்கெட்டை கைப்பற்றி அவர்களை வெல்வது அல்லது ரன்களை அடிக்க விடாமல் கட்டுப்படுத்திக்கொண்டு வெல்வது தான். இதில் ஏதாவது ஒன்று நிச்சியமாக செய்ய முடியும்.

எதிர் அணியின் முதல் இரு விக்கெட்டை விரைவாக கைப்பற்றிவிட்டால், வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் அதிகம் என்பதில் சந்தேகமில்லை இதுதான் உண்மை, இதை தான் அனைத்து அணிகளும் பின்பற்றி வருகின்றனர் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளரான பார்த் அருண்.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தென்னாபிரிக்கா அணியும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். முதலில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைக்குமா ?? இந்திய அணி ? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular